ஆற்று நீரில் சிக்கிய நாயை மீட்ட இளைஞர்...வைரல் வீடியோ!

நாய் ஒன்று ஆற்று நீரில் அடித்து செல்லப்பட இருந்ததை துரிதமாக செயல்பட்டு இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : May 30, 2022, 06:33 PM IST
  • நீரில் மாட்டி கொண்ட நாய்.
  • கீழே இறங்கி காப்பாற்றிய இளைஞர்.
  • இணையத்தில் வைரல் ஆகும் வீடியோ.
ஆற்று நீரில் சிக்கிய நாயை மீட்ட இளைஞர்...வைரல் வீடியோ! title=

இயற்கை சீற்றம் அல்லது ஏதேனும் ஒரு இடர்பாட்டில் சிக்குவோரை காப்பாற்ற உரிய அதிகாரிகள் தேவையில்லை, நல்ல மனம் இருந்தால் போதும் என்பதை நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்கள் நிகழ்ந்து வருகிறது.  வேகமாக வெகுண்டோடும் ஆற்று நீரால் அடித்துச்செல்லப்பட்ட நாயை ஒரு இளைஞன்  துணிச்சலாக காப்பாற்றி கரை சேர்க்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.  இதுபோன்ற இடர்பாடு சமயங்களில் பலரும் மனிதர்களை காப்பாற்ற காட்டும் ஆர்வத்தை விலங்குகளை காப்பாற்றுவதில் காமிக்கமாட்டார்கள்.  அப்படி இருக்கையில் தற்போது ஒரு இளைஞர் மனித நேயத்துடனும், துணிச்சலுடனும் செய்த காரியம் இணையத்தில் பாராட்டை பெற்று வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: பாம்பு என்றால் படை தான் நடுங்கும்... நான் இல்லை; வீர மங்கையின் சாகசம்

தற்போது இந்த அற்புதமான வீடியோவானது ட்விட்டரில் யோக் என்கிற கணக்கு பக்கத்தில் பகிரப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில், ஒரு சுவற்றின் ஓரமாக பல இளைஞர்கள் நின்றுகொண்டு இருக்கின்றனர், அந்த பகுதியில் வெள்ள பேருக்கு போல ஆற்று நீர் பெருக்கெடுத்து ஒத்துக்கொண்டு இருக்கிறது.  அந்த நீரில் நாய் ஒன்று சிக்கி கொண்டுவிட்டது, அதனை மீட்க ஒரு இளைஞர் அந்த நீரினுள் தைரியமாக இறங்குகிறார்.  மற்ற அனைவரும் இந்த காட்சியை அவர்களது செல்போன்களில் படம்பிடிக்கின்றனர்.  அந்த நபர் மட்டும் தைரியமாக நீரில் இறங்கி அந்த நாயை நீரை விட்டு மேலே தூக்கி மற்றவர்களிடம் கொடுத்துவிட்டு, அவரும் மேலே ஏறி வருகிறார்.

 

இந்த இளைஞரின் துணிச்சலையும், மனித நேயத்தையும் இணையம் வழியாக பார்த்த இணையவாசிகள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.  இணையத்தில் பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவிற்கு இதுவரை ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்குகள் மற்றும் பல சிறப்பான கமெண்டுகள் குவிந்துள்ளன.

மேலும் படிக்க | Viral Video: இரு தலைப்பாம்பிடம் சிக்கிய எலி; மனம் பதறச் செய்யும் கொடூர வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News