6 மாநிலங்களில் உள்ள 25 ராஜ்யசபா இடங்களுக்கு இன்று தேர்தல்!

உத்தரப் பிரதேசம், கர்நாடகா, சட்டீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 25 ராஜ்யசபா இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. 

Last Updated : Mar 23, 2018, 08:20 AM IST
6 மாநிலங்களில் உள்ள 25 ராஜ்யசபா இடங்களுக்கு இன்று தேர்தல்! title=

உத்தரப் பிரதேசம், கர்நாடகா, சட்டீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ள 25 ராஜ்யசபா இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. 

நாடு முழுவதும் 58 ராஜ்யசபா இடங்கள் காலியாக இருந்தன. அதில் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், ஜவடேகர் உட்பட 33 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மீதமுள்ள 25 இடங்களுக்கு இன்று தேர்தல் நடைபெற உள்ளது. 

இந்நிலையில் உத்தரப் பிரதேசம், கர்நாடகா, சட்டீஸ்கர், தெலுங்கானா, மேற்கு வங்கம் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள இடங்களுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் உத்தரப் பிரதேசத்தில் காலியாக உள்ள 10 இடங்களுக்கு அருண் ஜெட்லி, ஜெயா பச்சன் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

இன்று காலை 9 மணிக்கு துவங்கும் ஓட்டுப்பதிவு மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Trending News