Happy New Year! குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம்!! புதுவையின் புத்தாண்டு சலுகை

புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதியால் சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர்... சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க மதுபானத்திற்கு சிக்கன் 65 இலவசம்.. சன்னி லியோனின் நிகழ்ச்சி என புதுச்சேரி களைகட்டியிருக்கிறது... 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 30, 2021, 03:56 PM IST
  • புத்தாண்டு கொண்டாட்டங்கள் புதுச்சேரி களைகட்டியது
  • குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம்!
  • சன்னி லியோனின் கலைநிகழ்ச்சி
Happy New Year! குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம்!! புதுவையின் புத்தாண்டு சலுகை title=

புதுச்சேரி: புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கொடுக்கப்பட்ட அனுமதியால் சுற்றுலா பயணிகள் வந்து குவிகின்றனர்... சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்க மதுபானத்திற்கு சிக்கன் 65 இலவசம்.. சன்னி லியோனின் நிகழ்ச்சி என புதுச்சேரி களைகட்டியிருக்கிறது... 

கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் தமிழகம், கர்நாடகம், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் புதுவையில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

வெளிமாநில சுற்றுலா பயணிகள் 2 தடுப்பூசிகள் செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்கவேண்டும், சமூக இடைவெளியை கடைபிடித்து முகக்கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதையொட்டி புத்தாண்டை கொண்டாட வெளிமாநிலத்தவர்கள் புதுச்சேரியில் குவிந்தவண்ணம் உள்ளனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வந்த பலர் தொடர்ந்து  இங்கேயே முகாமிட்டுள்ளனர். கேளிக்கை நிகழ்ச்சிகளுடன் புத்தாண்டு கொண்டாட தனியார் ஓட்டல்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுவை சீகல்ஸ் ஓட்டல், பழைய துறைமுகம், சுண்ணாம்பாறு படகு குழாம், பேரடைஸ் பீச் போன்றவற்றிலும் புத்தாண்டு கொண்டாட தனியார் நிறுவனங்களை அரசு அனுமதித்துள்ளது. 

Also Read | புத்தாண்டு வாழ்த்து ஸ்டிக்கர்களை பதிவிறக்கம் செய்து Whatsapp-இல் சேர்ப்பது எப்படி?

மதுவிருந்து, உணவு என தனிநபருக்கு ரூ.3 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பழைய துறைமுக வளாகத்தில் பிரபல இந்தி நடிகை சன்னிலியோன் (Actress Sunny leone) பங்கேற்கும் கலைநிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அங்கு பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது.

புத்தாண்டு தினத்தன்று (New Year) பல்லாயிரக்கணக்கானோர் கூடுவார்கள் என்பதால் கடற்கரை சாலையில் போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஒயிட் டவுண் கடற்கரை சாலை-சுப்பையா சாலை, பட்டேல் சாலை, செஞ்சி சாலைக்கு இடைப்பட்ட பகுதி) பகுதியில் 31-ந்தேதி போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

கடற்கரையில் கூடுபவர்கள் கடலுக்குள் இறங்கி குளிப்பதை தடுக்கும் விதமாக அங்கு தடுப்புக்கட்டைகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அத்துமீறல்களை தடுக்கும் விதமாகவும் கூட்டத்தை கண்காணிக்கவும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோரை விரைவில் அடையாளம் காணும் வகையிலும் 40 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

drinks

புத்தாண்டை கொண்டாட வருவோர் எங்கெங்கு வாகனங்களை நிறுத்த வேண்டும் என்றும் காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. புத்தாண்டு நெருங்கிய நிலையில் வெளியூர் சுற்றுலா பயணிகள் புதுவைக்கு வந்து முகாமிட்டுள்ளனர். நவநாகரீக ஆடைகளுடன் அவர்கள் வீதிகளில் உலா வந்தவண்ணம் உள்ளனர்.

போக்குவரத்து நெரிசல்
வெளிமாநில வாகனங்கள் ஆயிரக்கணக்கில் புதுவைக்கு வந்துள்ளதால் எங்கு பார்த்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் இன்னும் வர உள்ளனர். அப்போது மேலும் நெரிசல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகளின் படையெடுப்பு காரணமாக அனைத்து தங்கும் விடுதிகளும் நிரம்பி வழிகின்றன. முன்பதிவு செய்தவர்கள் தவிர மற்றவர்களுக்கு அறையில்லை என்ற நிலை நிலவுகிறது. ஒருசில ஓட்டல்களில் வழக்கமான கட்டணத்தைவிட 3 மடங்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

Read Also | நடிகை சன்னி லியோனின் கலை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு; பேனர், போஸ்டர்கள் கிழிப்பு

இதற்கிடைய சுற்றுலா பயணிகள் அதிக அளவில் கூடுவதால் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் புத்தாண்டு கொண்டாட்டத்தை (New Year Celebrations) ரத்துசெய்ய வேண்டும்  என்றும் அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் புதுச்சேரி என்றாலே தற்போது மதுபானத்திற்கு புகழ் பெற்றதாக மாறி வரும் நிலையில் புதுச்சேரி தவளக்குப்பம் மற்றும் சில பகுதிகளில் உள்ள மதுபான கடைகளில் சிறப்பு சலுகை என அறிவித்து குவாட்டர் வாங்கினால் சிக்கன் 65 இலவசம் என்று அறிவித்துள்ளது.

இன்று முதல் 1 ம் தேதிவரை இந்த இலவசம் உள்ளது என்று அறிவித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் குடிமகன்கள் இன்று காலை முதலே வருகை தந்து வருகின்றனர். சிக்கன் வாங்கினால் முட்டை இலவசம் என்று மாறி குவாட்டர் வாங்கினால் சில்லி சிக்கன் இலவசம் என்று அறிவித்து குடிமகன்களை புதுச்சேரி பார்கள் கவர்ந்து  வருகின்றனர்.

Also Read | புத்தாண்டில் பேரழிவுகள் பற்றிய நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News