இந்த வார தொடக்கத்தில் இன்ஸ்டாகிராம் ஒரு புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இதன் மூலம் பயனர்கள் டெலிட் செய்த பதிவுகளை மீட்டெடுக்க உதவுகிறது.
உங்களுக்கே தெரியாமல் ஹேக்கர்கள் உங்கள் கணக்கிற்கான அணுகலைப் பெற்று பதிவுகளை நீக்கியிருந்தாலும், அவற்றை மீட்டெடுக்க உங்களுக்கு வேறு வழியில்லாமல் போயிருந்தாலும் இப்போது இந்த புதிய அம்சத்தின் மூலம் நீங்கள் அவற்றை மீட்டெடுக்க முடியும்.
புதிய இன்ஸ்டாகிராம் அம்சம் “சமீபத்தில் நீக்கப்பட்டது” (Recently Deleted) என்று அழைக்கப்படுகிறது, மேலும் இது உலகளவில் பயனர்களுக்கு கிடைக்கிறது. இது புகைப்படங்கள், வீடியோக்கள், ரீல்ஸ், ஐஜிடிவி வீடியோக்கள் மற்றும் ஸ்டோரிகளிலும் வேலை செய்கிறது. சமீபத்தில் நீக்கப்பட்ட உள்ளடக்கத்தை நிரந்தரமாக நீக்கும்போது அல்லது மீட்டமைக்கும்போது பயனர்கள் தங்கள் கணக்கைச் சரிபார்க்கும்படி இன்ஸ்டாகிராம் கேட்கும். நீங்கள் இடுகைகளை நீக்கிவிட்டு அவற்றை மீட்டெடுக்க விரும்பினால், நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் இங்கே.
- கீழே ஸ்கிரோல் செய்து, கிடைக்கக்கூடிய விருப்பங்களின் பட்டியலிலிருந்து Account என்பதைத் தேர்ந்தெடுக்கவும். - நீங்கள் இங்கு வந்தவுடன் Recently Deleted என்பதைத் தேடுங்கள். - சமீபத்தில் நீக்கப்பட்ட கோப்புறையில் புகைப்படங்கள், வீடியோக்கள், ரீல்ஸ், ஐஜிடிவி வீடியோக்கள் மற்றும் நீக்கப்பட்ட ஸ்டோரீஸ் ஆகியவை இருக்கும். - விருப்பங்களின் பட்டியலிலிருந்து நீங்கள் மீட்டெடுக்க விரும்பும் பதிவைத் தேர்ந்தெடுக்கவும்.
இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் 24 மணிநேரம் கோப்புறையில் இருக்கும், மற்ற எல்லா பதிவுகளும் அவை நீக்கப்பட்ட நேரத்திலிருந்து 30 நாட்களுக்கு கிடைக்கும். 30 நாள் காலம் முடிந்ததும், இன்ஸ்டாகிராம் இந்த பதிவுகளை நிரந்தரமாக நீக்கும். உள்ளடக்கத்தை நிரந்தரமாக நீக்குவதற்கு அல்லது மீட்டமைப்பதற்கு முன் பயனர்களுக்கான சரிபார்ப்பு செயல்முறை உரை அல்லது மின்னஞ்சல் வழியாக செய்யப்படும். இது ஹேக்கர்கள் பயனர் கணக்குகளுக்கான அணுகலைப் பெறுவதைத் தடுக்க உதவும்.
Recently Deleted அம்சம் இந்தியாவில் பயனர்களை இன்னும் அடையவில்லை, ஆனால் இன்ஸ்டாகிராம் இந்த அம்சத்தை ஆண்ட்ராய்டு மற்றும் iOS இல் வெளியிடத் தொடங்கியுள்ளது, எனவே இது விரைவில் கிடைக்கும்.