உணவே மருந்து: இந்த 5 விஷயங்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள், வயிறு தொடர்பான எந்த ஒரு நோயும் நொடியில் குணமாகும்.
Food for Upset Stomach: பல நேரங்களில் வயிற்று உபாதையால் எதையும் சாப்பிடத் தோன்றாமல், உடல் ஆரோக்கியம் பெரிதும் பாதிக்கப்படும். ஆனால், சில உணவுகள் வயிறு தொடர்பான பல பிரச்சனைகளுக்கு நிவாரணம் கொடுக்கும். உங்கள் அன்றாட உணவில் சேர்க்கப்படும் சில உணவுகள் வயிறு கோளாறு அனைத்திற்கு தீர்வாக அமையும்.
தயிர் மற்றும் சாதம் இரண்டும் எளிதில் ஜீரணமாகும் என்பதோடு, அதில் உள்ள நார்ச்சத்து புத்துணர்ச்சி ச்ளிக்கிறது. வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனை ஏதேனும் இருந்தால், சாதத்தை, குழைய சமைத்து, தயிரில் கலந்து சாப்பிடவும். இந்துப்பு மற்றும் வறுத்த சீரகத்தையும் இதனுடன் சேர்க்கலாம். இது வெறும் வயிற்றில் சாப்பிட ஏற்ற உணவாக கருதப்படுகிறது. தயிர் புரோபயாடிக் நிறைந்த உணவு என்பதால், குடலில் நல்ல பாக்டீரியாக்கள் மூலம் நிவாரணம் கிடைக்கிறது.
வயிறு பிரச்சனை இருந்தால், வயிற்று வலி, தலைசுற்றல் மற்றும் தலைவலி போன்ற பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பிக்கும். இஞ்சி டீ குடிப்பது நிவாரணம் அளிக்கும். நன்றாக அரைத்த, அல்லது துருவிய இஞ்சியுடன் ஒரு கப் தண்ணீரை கொதிக்க வைத்து, உங்கள் சுவைக்கு ஏற்ப எலுமிச்சை மற்றும் தேன் சேர்க்கவும். இஞ்சி டீயில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
வாழைப்பழம் இயற்கையான ஆன்டிஆசிட் தன்மையைக் கொண்டுள்ளது, என்பதோடு புத்துணர்ச்சியும் அளிக்கிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது வயிற்றில் உள்ள எரிச்சலைக் குறைக்கிறது. இதனுடன், வாழைப்பழமும் உங்களுக்கு உடனடி ஆற்றலை அளிக்கிறது.
வயிற்று உபாதையால் தலைசுற்றல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனை இருந்தால், கொம்புச்சா தேநீர். அதாவது புளிக்க வைத்த தேநீர், உங்களுக்கு நிவாரணம் அளிக்கும். இது வீக்கத்தை குறைக்கிறது. வயிறு தொடர்பான பிரச்சனைகளை நீக்குகிறது. ஆனால் நீங்கள் அதை ஒரே நேரத்தில் வேகமாக குடிக்கக் கூடாது. மாறாக கொஞ்சம் கொஞ்சமாக குடிக்கவும். கொம்புச்சா புரோபயாடிக் தன்மை நிறைந்த உணவாகும். மேலும் இது உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கிறது.
வயிறு தொடர்பான பிரச்சனைகளில், வெறும் வயிற்றில் ஓட்ஸ் சாப்பிடுவதால் உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும். நீங்கள் அதை இனிப்பு மற்றும் உப்பு சேர்த்து சாப்பிடலாம். ஆனால் அதில் எந்த மசாலாவையும் சேர்க்க வேண்டாம். இது வயிற்று வலியை ஏற்படுத்தும். நீங்கள் விரும்பினால், ஓட்ஸ் உணவில் ஒரு வாழைப்பழத்தையும் சேர்க்கலாம். ஓட்ஸில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். மறுப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. தீவிர உடல் பிரச்சனைக்கு கண்டிப்பாக மருத்துவ ஆலோசனை பெறவும்.