ரூ.65 லட்சத்திற்கு விற்கப்படும் வாட்டர் பாட்டில்கள்! அப்படி என்ன ஸ்பெஷல்!

ரூ.90000லிருந்து தொடங்கி ரூ.65 லட்சம் வரையிலான அதிக விலைகொண்ட வாட்டர் பாட்டில்கள் உலகில் விற்பனையாகின்றன.

 

1 /5

பிவர்லி ஹில்ஸ் ஹெச்2ஓ டயமண்ட் எடிஷன் : கலிபோர்னியாவை பிறப்பிடமாக கொண்ட இந்த பிவர்லி ஹில்ஸ் ஹெச்2ஓ டயமண்ட் எடிஷன் பாட்டில் ஒவ்வொன்றிலும் 600க்கும் மேற்பட்ட வெள்ளை வைரக்கற்கள் மற்றும் 250க்கும் மேற்பட்ட கருப்பு வைரக்கற்கள் உள்ளன.  உலகின் சிறந்த ருசியுள்ள நீராக கருதப்படும் இந்த வாட்டர் பாட்டிலின் விலை ரூ.65 லட்சம் ஆகும்.

2 /5

அக்வா டி க்ரிஸ்டல்லோ ட்ரிபுடோ எ மோடிக்லியாணி : அக்வா டி க்ரிஸ்டல்லோ ட்ரிபுடோ எ மோடிக்லியாணி பாட்டிலில் உள்ள நீர்கள் பிஜி, பிரான்ஸ் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய மூன்று இடங்களில் இருந்து பெறப்படுகிறது.  இந்த பாட்டிலின் மூடி 24 காரட் தங்கத்தால் ஆனவை.  இதன் மதிப்பு சுமார் ரூ.45 லட்சம் ஆகும்.

3 /5

பிலின்க் ஹெச்2ஓ : அமெரிக்காவை பிறப்பிடமாக கொண்ட பிலின்க் ஹெச்2ஓ வாட்டர் பாட்டில்கள் ரூ. 45 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.  அறிய வகை ஒளிரும் கற்களை கொண்டு இந்த வகை கண்ணாடி பாட்டில்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளது.  இதிலுள்ள நீரின் சுவை முதலில் இனிப்பாகவும் பின்னர் சுவையற்றும் வித்தியாசமாக உள்ளது.

4 /5

நெவாஸ் : ஜெர்மனியை பிறப்பிடமாக கொண்ட 'நெவாஸ்' வாட்டர் பாட்டில்கள் 2017-ல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இதிலுள்ள நீரின் சுவை அனைவராலும் விரும்பப்படுகிறது.  ஷாம்பெய்ன் போன்ற வடிவத்தில் இருக்கும் இந்த வாட்டரை பாட்டில்களின் விலை சுமார் ரூ.1.32 லட்சம் ஆகும்.

5 /5

ஃபில்லிகோ : 2005ம் ஆண்டு நிறுவப்பட்ட 'ஃபில்லிகோ' நிறுவனத்தின் வாட்டர் பாட்டில்கள் மிகவும் விலையுயர்ந்ததாகும்.  ஜப்பானில் உள்ள ஒரு நீரூற்றிலிருந்து பெறப்படும் சுத்தமான நீர் தான் இந்த பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ளது.  ரூ.90,000 மதிப்புள்ள இந்த வாட்டர் பாட்டில் முழுவதும் ஸ்வாரோவ்ஸ்கி என்கிற அரிய வகை க்ரிஸ்டலால் உருவாக்கப்பட்டுள்ளது.