சிட்ரோன் சி5 ஏர் கிராஸ் : நல்ல கார் தான், ஆனால் மார்க்கெட்டில் விற்பனை ஆகல - மக்கள் ஆர்வம் காட்டாதது ஏன்?

சிட்ரோன் சி5 ஏர் கிராஸ் கார் நல்ல மாடல், அனைத்து அம்சங்களும் இருந்தாலும், இந்த காரை மக்கள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. 

கடந்த 6 மாதத்தில் வெறும் 4 கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது சிட்ரோன் சி5 ஏர் கிராஸ் கார். இதனால் இந்த நிறுவனம் இந்த கார் விற்பனையை இந்தியாவில் முழுவதுமாக நிறுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

1 /9

இந்தியாவில் விற்பனை செய்து வரும் சி5 ஏர் கிராஸ் கார்களின் விற்பனை மிக மோசமான அளவுக்கு சரிவை சந்தித்து வருகிறது. இந்த காரின் விற்பனை சரிவிற்கு இதன் விலை மிக முக்கிய காரணம்.

2 /9

சிட்ரோன் நிறுவனத்தின் சி5 ஏர் கிராஸ் காரை மே மாதம் யாருமே வாங்கவில்லை. அறிமுகமான புதிதில் சி5 ஏர் கிராஸ் கார் எஸ்யூவி கார் செக்மெண்டிலேயே மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த காரின் வடிவமைப்பு முதல் ஏகப்பட்ட அம்சங்கள் சிறப்பாக இருந்தன. இதன் ரிவ்யூ எல்லாம் பாசிட்டிவாகவே இருந்தது.

3 /9

காரின் விலை காரணமாக வாங்கலாம் என நினைத்தவர்கள் கூட பேக் அடித்துவிட்டனர். அதிக விலை இருப்பதால் காரின் விற்பனை ஓஹோ என்று இல்லாவிட்டாலும், ஓரளவுக்கு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அந்த எதிர்பார்ப்பை கூட இந்த காரின் விற்பனை பூர்த்தி செய்யவில்லை.

4 /9

கடந்த ஆறு மாதங்களில் வெறும் நான்கு கார்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளன. கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் இரண்டு கார்களும் 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒரு காரும் விற்பனையானது. அதன் பிறகு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் ஒரு கார் கூட விற்பனையாகவில்லை. கடந்த ஏப்ரல் மாதம் ஒரு கார் விற்பனையாகியுள்ளது.

5 /9

கடந்த ஆறு மாதங்களில் வரும் நான்கு கார்களை மட்டுமே விற்பனை செய்து இந்த காரின் விற்பனை மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. ஆனால் இந்த காரில் உள்ள அம்சங்கள் மற்றும் வசதிகளை பற்றி பார்த்தால் நிச்சயம் பலருக்கு இந்த காரை வாங்க ஆசை வரும். இந்த காரில் 1997 சிசி 4சிலிண்டர் டீசல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 177பிஎஸ் பவரையும், 400என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

6 /9

சிட்ரோன் சி5 ஏர் கிராஸ் கார் இன்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த கார் 52.5 லிட்டர் பெட்ரோல் டேங்க் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கார் இந்திய சாலைகளில் 17.5 கிலோ மீட்டர் அளவுக்கு மைலேஜ் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த காரின் அளவுகளை பொருத்தவரை 4500மிமீ நீளமும், 1969 மிமீ அகலமும், 1710மிமீ உயரமும், 2730மிமீ வீல் பேஸூம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

7 /9

சிட்ரோன் சி5 ஏர் கிராஸ் காரில் எல்இடி புரொஜெக்டர் ஹெட்லைட், எல்இடி டே டைம் ரன்னிங் லைட், 3டி எல்இடி பின்பக்க லைட்டுகள்,ஓஆர்விஎம் பகுதியில் எல்இடி இண்டிகேட்டர் என லைட்டிங் செட்டப் இருக்கிறது. இந்த காரின் உட்புறம் 31.24செ.மீ கொண்ட டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இதுபோக 25.4செ.மீ கொண்ட கெப்பாசிட்டிவ் டச் ஸ்கிரீன் இன்போடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ சப்போர்ட் செய்யும் வசதியும் உள்ளது.

8 /9

இந்த காரின் டிரைவர் சீட்டை எலெக்ட்ரிகலி அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஆப்ஷனும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இந்த காரின் பின்பக்கம் கேட் என்பது கையால் திறக்கப்பட தேவையில்லை. சைகை மொழியிலேயே தெரிந்துகொள்ள ஆப்ஷன் வழங்கப்பட்டுள்ளது. இந்த காரில் மொத்தம் 580 லிட்டர் பூட் ஸ்பேஸ் வசதி இருக்கிறது. பின்பக்க சீட்டுகளை மடித்துவிட்டால் 720 லிட்டர் வரை பூட் வசதி கிடைக்கும்.

9 /9

சிட்ரோன் சி5 ஏர் கிராஸ் காரில் உள்ள பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை ப்ளைன்ட் ஸ்பாட் இன்ஃபர்மேஷன் சிஸ்டம், ஆறு ஏர் பேக்குகள், காபி பிரேக் அலர்ட், ஹில் டிசென்ட் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் அஸிஸ்ட், டிராக்சன் கண்ட்ரோல், எலெக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், முன் பக்கமும் பின்பக்கமும், பார்க்கிங் சென்சார் மற்றும் கேமரா உள்ளிட்ட ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன.