ரோஹித் சர்மாவுக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் யார்? இவருக்கு தான் வாய்ப்பு?

ரோகித் சர்மா ஓய்வு பெற்ற பிறகு மூன்று பார்மட்டிற்கும் புதிய கேப்டனாக யாரை நியமிக்கலாம் என்று  பிசிசிஐ   தற்போது பரிசீலனை செய்து வருகிறது.

 

1 /6

டி20 உலக கோப்பையை வென்ற பிறகு இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து உள்ளார்.  

2 /6

புதிய டி20 கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கபடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் சூரியகுமார் யாதவ் கேப்டன் ஆக நியமிக்கப்பட்டார்.  

3 /6

தற்போது டெஸ்ட் மற்றும் ஒரு நாள் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவிற்கு பிறகு மூன்று பார்மட்டிற்கும் ஒரே கேப்டனை பிசிசிஐ தேடி வருகிறது.  

4 /6

சமீபத்திய தொடர்களில் பிசிசிஐ தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில்லுக்கு கேப்டன்சி வாய்ப்பை வழங்கி வருகிறது. அவரை இந்தியாவின் வருங்கால கேப்டனாக பார்க்கிறது.  

5 /6

ஹர்திக் பாண்டியாவிற்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் அவரை கேப்டன் பதவியில் இருந்து தற்காலிகமாக பிசிசிஐ நீக்கி உள்ளது.  

6 /6

எவ்வாறாயினும், மூன்று ஃபார்மட்களிலும் சிறந்து விளங்கும் வீரரை தேர்வு செய்வது பிசிசிஐக்கு சற்று கடினமாக இருக்கும். இருப்பினும்  கேப்டன்சி போட்டியில் சுப்மான்  கில் மற்றும்  ரிஷப் பந்த் முன்னிலையில் உள்ளனர்.