தக்காளி காய்ச்சல் என்றால் என்ன? அறிகுறிகள்

தக்காளி காய்ச்சல் என்பது ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது முக்கியமாக குழந்தைகளை (5 வயதுக்கு கீழ்) பாதிக்கிறது. இந்த நோய் தக்காளி காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இந்த நோயின் பொதுவான அறிகுறிகளில் ஒன்று சிவப்பு நிற கொப்புளங்கள். அவை சிறிய தக்காளியைப் போலவே இருக்கும். எனவே இந்த கொடிய தக்காளி காய்ச்சல் அறிகுறிகள் என்னவென்று இங்கே பார்ப்போம்.

1 /5

தக்காளி காய்ச்சல் காக்ஸ்சாக்கி வைரஸ் 16 என்ற வைரஸால் உண்டாகிறது. இது மிதமான் பாதிப்பை உண்டாக்கும். இதிலும் எண்டிரோ வைரஸ் 71 என்ற வைரஸ் பாதிப்பு உண்டாகும் போது தீவிரமாகலாம். ஆனால் கேரளாவில் வந்திருப்பது காக்சாக்கி வைரஸ் என்பதால் இது மிதமான பாதிப்பையே உண்டாக்கும்.  

2 /5

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தக்காளி காய்ச்சலால் பாதிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு சோர்வு, மூட்டு வலி, அதிக காய்ச்சல் மற்றும் உடல்வலி போன்றவை ஏற்படும்.

3 /5

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் ஐந்து வயதுக்குட்பட்ட 80 குழந்தைகளுக்கு தக்காளி காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தக்காளி காய்ச்சல் ஆபத்தானது அல்ல என்றாலும், சரியான சிகிச்சை இல்லை என்றால், நோய் தீவிரமடையும் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

4 /5

அறிகுறிகள் கண்டறியப்பட்டால், உடனடியாக சிகிச்சை பெறவும். பாதிக்கப்பட்ட குழந்தைகள் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை குடிக்க வேண்டும். உடலை நீரேற்றமாக வைத்திருப்பது முக்கியமாகும். பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பைத் தவிர்க்க வேண்டும்.

5 /5

தக்காளி காய்ச்சலின் பொதுவான அறிகுறிகள் சில: தோலில் சிவப்பு நிற கொப்புளங்கள் தோல் எரிச்சல் மூக்கு ஒழுகுதல் அதிக காய்ச்சல் வயிற்று வலி குமட்டல் அல்லது வாந்தி தொடர் இருமல் உடல் வலி தசை வலி மூட்டு வலி தும்மல் வயிற்றுப்போக்கு மிகுந்த சோர்வு