Student Credit Card: கிரெடிட் கார்டுகளின் பயன்பாடு நாம் செலவு செய்யும் பழக்கத்தை பல விதங்களில் மாற்றியுள்ளது. இப்போது பெரும்பாலான மக்கள் அவசர காலங்களில் சேமிப்புக் கணக்குகளுக்குப் பதிலாக கிரெடிட் கார்ட்களைப் பயன்படுத்துகின்றனர். வழக்கமான கிரெடிட் கார்டுகளைப் போல மாணவர் கிரெடிட் கார்டுகளும் நடைமுறையில் உள்ளன. அவை கல்லூரி மாணவர்களின் செலவுகள் மற்றும் வருவாய்களுக்கு இடையில் சமநிலையை பராமரிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன.
மாணவர் கிரெடிட் கார்டுகள் உங்கள் பணத்தை நிர்வகிக்கவும் அதை எளிதாக செலவழிக்கவும் உதவுகின்றன. இந்தியா அல்லது வெளிநாட்டில் படிக்கும் மாணவர்கள் இந்த அட்டையைப் பயன்படுத்தலாம். மாணவர்களுக்கு வழங்கப்படும் கிரெடிட் கார்டுகளில் பல சலுகைகளும் உள்ளன.
இந்த கிரெடிட் கார்டுகள் வரையறுக்கப்பட்ட கடன் வசதியுடன் வருகின்றன. இதன் காரணமாக மாணவர்கள் அனாவசியமாக பணம் செலவழிக்க வழியில்லாமல் போகிறது. அவர்கள் மீது கடன் சுமையும் இல்லாமல் இருக்கிறது. இந்த அட்டையின் கீழ் பணம் எடுக்கும் அளவு குறைவாக உள்ளது. எனவே மாணவர்கள் இந்த தொகையை மிகவும் திட்டமிட்டு செலவழிக்கிறார்கள். இந்த கிரெடிட் கார்டின் செல்லுபடியாகும் காலம் 5 ஆண்டுகள் ஆகும். மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்ததும் இந்த அட்டையை ஸ்டாண்டர்ட் கிரெடிட் கார்டாக மாற்றலாம். மாணவர்கள் தங்கள் வேலை மற்றும் வருமானத்திற்கு ஏற்ப அதன் வரம்பையும் அதிகரிக்கலாம். உங்கள் கிரெடிட் பில்களை சரியான நேரத்தில் செலுத்துவது உங்கள் கிரெடிட் ஸ்கோரை மேம்படுத்துகிறது. மாணவர்கள் சிறு வயதிலேயே நிதி மேலாண்மையைப் புரிந்துகொள்கிறார்கள். மாணவர் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.
நீங்கள் மாணவர் கிரெடிட் கார்டுக்கு ஆன்லைனிலும் ஆஃப்லைனிலும் விண்ணப்பிக்கலாம். மாணவர் கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க, நீங்கள் கல்லூரி மாணவராக இருப்பது மிகவும் முக்கியமாகும். விண்ணப்பிப்பவரின் வயது 18-க்கு மேல் இருக்க வேண்டும். இருப்பினும், கிரெட் கார்ட் அளிக்கும் சில நிறுவனங்கள் கல்வி கடன்களையும் கோருகின்றன.
மாணவர்களிடம் அவர்களது பெயரில் FD இருந்தால், அதை வைத்து கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். இது தவிர, அவர்களது பெற்றோர்களிடம் ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டில் ஆட்-ஆன் வசதியை பயன்படுத்தி மாணவர் கிரெடிட் கார்டைப் பெறலாம்.
நீங்கள் ஒரு மாணவராக இருந்து, கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால், இந்த ஆவணங்கள் உங்களுக்கு தேவைப்படலாம். கிரெடிட் கார்டுக்கு விண்ணப்பிக்க, உங்களுக்கு பிறப்புச் சான்றிதழ், கல்லூரி அல்லது பல்கலைக்கழக ஐடி, பான் கார்டு, குடியிருப்பு முகவரி சான்று மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவை தேவைப்படும்.