Hardik Pandya: ஹர்திக் பாண்டியாவுக்கு ஆதரவு அதிகமாக என்ன செய்ய வேண்டும்... இதுதான் ஒரே வழி!

IPL 2024 Hardik Pandya: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது பல தரப்பில் இருந்து பலத்த விமர்சனங்கள் வரும் நிலையில், இதில் தப்பிக்க அந்த அணி நிர்வாகமும், ஹர்திக் பாண்டியாவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை நீக்கி, ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

 

1 /7

2022 மெகா ஏலத்தை முன்னிட்டு மும்பை அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த இரு சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தார். அதில் 2022இல் சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்த ஹர்திக், 2023இல் இறுதிப்போட்டி வரை குஜராத் அணியை அழைத்துச்சென்றார்.   

2 /7

டி20 கேப்டன்ஸியில் கலக்கி வந்த ஹர்திக் பாண்டியாவை இந்தாண்டு மினி ஏலத்தை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணி, குஜராத் அணியிடம் ரேட் செய்தது. அதன்படி, ஹர்திக் பாண்டியாவை மீண்டும் மும்பை அணியே பெற்றுக்கொள்ள அவருக்கு கேப்டன்ஸி பதவியும் கொடுக்கப்பட்டது. 5 முறை கோப்பையை வென்று கொடுத்த ரோஹித் சர்மா அதிரரடியாக கேப்டன்ஸியில் இருந்து கீழிறக்கப்பட்டார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.   

3 /7

தொடரின் முன்பாகவே சலசலப்பு இருந்த நிலையில், போட்டி தொடங்கிய பின்னர் குஜராத்திலும், ஹைதராபாத்திலும், மும்பையிலும் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக மைதானத்தில் பலத்த எதிர்ப்புக் கூச்சல் இருந்தது. அதுமட்டுமின்றி சொந்த மண் மும்பை உள்பட நடைபெற்ற மூன்று போட்டிகளிலும் மும்பை தோற்றதால் ஹர்திக் பாண்டியா மீதான எதிர்ப்பு என்பது அதிகரித்திருக்கிறது. ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எல்லை மீறிய அத்துமீறல்களையும் செய்து வருவது கவலை அளிக்கிறது.  

4 /7

இதற்கு முன் பல வீரர்களுக்கு இதுபோன்ற எதிர்ப்பு இருந்திருந்தாலும், இந்தியாவில் இந்திய வீரர் ஒருவருக்கு இது நடைபெறுவது முதல்முறை எனலாம். குறிப்பாக, மும்பை அணியின் சொந்த மைதானத்திலேயே அதன் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவை எதிர்த்து கூச்சலிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதலில் மும்பை ரசிகர்களை தன்வசம் கொண்டுவர மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகமும், ஹர்திக் பாண்டியாவும் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்.  

5 /7

தற்போது மும்பை அணிக்கு மூன்று போட்டிகள் நிறைவடைந்துள்ளன. மீதம் இருக்கும் 11 லீக் போட்டிகளில் 6 போட்டிகள் மும்பை வான்கடேவில் நடைபெறுகிறது. அதிலும் வரும் ஞாயிற்றுக்கிழமை டெல்லி உடனும், ஏப். 11ஆம் தேதி ஆர்சிபி அணியுடனும், ஏப்.14ஆம் தேதி சிஎஸ்கே அணியுடனும் வான்கேடவில் போட்டி உள்ளது. இந்த மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் அவர்கள் பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பு இருக்கும், அதுமட்டுமின்றி மும்பை அணி ரசிகர்களும் சற்று சாந்தமாவார்கள்.   

6 /7

வெற்றி பெறுவதற்கு ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா மட்டுமின்றி ஒட்டுமொத்த அணி நிர்வாகமும் இதில் ஒன்றுபட்டு நின்று ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும். ஹர்திக் பாண்டியா, ரோஹித்திடம் சென்று கலந்துரையாட வேண்டும். ரோஹித் சர்மா தனது சக வீரரான ஹர்திக் பாண்டியாவுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும். தற்போதைய சூழலில் அவர்கள் முரண்பட்டு நிற்கவில்லை என்றாலும், பழைய பிணைப்பு தென்படவில்லை என்பதுதான் பெரிய பிரச்னை.   

7 /7

ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா இடையே நல்ல உரையாடல் களத்தில் நிகழும் போது ரசிகர்கள் இடையேயான கொதிப்பு அடங்க வாய்ப்புள்ளது. அவர்கள் இணையும் போது மும்பை இந்தியன்ஸ் யாராலும் வீழ்த்த முடியாத அணியாக உருவெடுக்கும். அதுமட்டுமின்றி ஹர்திக் பாண்டியா கேப்டன்ஸியிலும் சில விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். அணி வீரர்கள் தேர்வு முதல் பௌலிங் ரொட்டேஷன் வரை பல விஷயங்களில் உரையாடல் மூலம் நல்ல தீர்வை நோக்கி மும்பை செல்ல வேண்டும்.