Weekly Horoscope: செப். 12 -18 வரை அதிர்ஷ்டம் பெறும் சில ராசிகள்!

Weekly Horoscope: ஜோதிடத்தில் கிரகங்களின் இயக்கம் மிக முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்கள் மற்றும் விண்மீன்களின் இயக்கம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. கிரகங்களின் சஞ்சாரத்தால் சில ராசிக்காரர்களுக்கு சுப பலன்களும், சில ராசிக்காரர்களுக்கு அசுப பலனும் கிடைக்கும். தினபலனைப் போலவே வார ராசி பலன்களும் கிரகங்களின் இயக்கத்தை வைத்து கணக்கிடப்படும் நிலையில், செப்டெம்பர் மாதம் 3ம் வாரத்திற்கான பலன்களை அறிந்து கொள்ளலாம்.

1 /12

மேஷ ராசி பலன் - இந்த வாரம் மேஷ ராசிக்காரர்களுக்கு புதிய இடத்திலிருந்து சிறந்த வகையில் சலுகைகள் கிடைக்கும். இந்த வாரம் நீங்கள் அலுவலக வேலை காரணமாக அதிக அளவில் பயணம் செய்ய வேண்டியிருக்கும். எனினும் பயணங்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும். எனவே உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் தயங்க வேண்டாம். சமூக நடவடிக்கைகள் இந்த வாரம் அதிகமாக இருக்கும். ஆன்மீகம் தொடர்பான விஷயங்களிலும் நாட்டம் அதிகரிக்கும்.

2 /12

ரிஷப ராசிபலன்- இந்த வாரம் ரிஷபம் ராசிக்காரர்களுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்புகள் உருவாகி வருகிறது, அதற்கு தயாராக, செப்டம்பர் 13க்கு பிறகு விண்ணப்பிக்கவும். இளைஞர்கள் எந்த விதமான சர்ச்சைகளிலும் சிக்கிக் கொள்ள வேண்டாம். வரும் நாட்களில், உங்கள் பணிகளில், மனைவி மற்றும் நண்பர்களின் ஆதரவை முழுமையாகப் பெறுவீர்கள்.

3 /12

மிதுன ராசி பலன்- இந்த வாரத்தில் மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் செய்யும் ஒப்பந்தங்களில் நல்ல லாபத்தைப் பெறலாம். நல்லதோ கெட்டதோ எந்த விதமான கருத்துக்களை கூறுவதையும் இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். வாரத்தின் தொடக்கத்தில், இது போன்ற விஷயங்களில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

4 /12

கடக ராசி பலன்- இந்த வாரம் கடக ராசிக்காரர்கள் சிறப்பான புரிதலுடன், நீங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் கவனமாக இருக்கவும். எந்த விஷயத்திலும், பொறுமையாக இருக்கமுயற்சி செய்யுங்கள், வெற்றி நிச்சயம் வரும். ஈகோ மோதலால் உறவில் விரிசல் ஏற்படலாம். எனவே உங்கள் அன்புக்குரியவர்களிடையே எந்தவிதமான ஈகோவும் வர வேண்டாம். மற்றவர்களை அனுசரித்து நடக்கவும்.

5 /12

சிம்ம ராசி பலன்- இந்த வாரம் சிம்ம ராசிக்காரர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். 12ம் தேதி முதல் வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும். இளைஞர்கள் சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருப்பார்கள். இதன் மூலம் மக்களுடனான தொடர்பை அதிகரித்துக் கொள்வார்கள்.

6 /12

கன்னி ராசி பலன் - இந்த வாரம், கன்னி ராசிக்காரர்களுக்கான பணி சுமை அதிகமாக இருக்கும். ஆடம்பரப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் தேவையில் கவனம் செலுத்த வேண்டும். இளைஞர்கள் வீணாக கவலைப்பட வேண்டாம். அதே போல் தவறான நபர்களின் சகவாசத்திலிருந்து விலகி இருக்க வேண்டும். இல்லையெனில், உங்கள் பெயர் புகழ் கெட்டுவிடும். எனினும், உங்கள் கூட்டாளர்களை நம்புங்கள். எல்லா விஷயங்களையும் சந்தேகிப்பது சரியல்ல.

7 /12

துலாம் ராசி பலன்- இந்த வாரம் துலாம் ராசிக்காரர்களுக்கு பணிச்சுமை கூடும். இளைஞர்கள் அல்லது மாணவர்கள் இந்த வாரம், உயர் கல்வி அல்லது போட்டித் தேர்வில் பங்கேற்பார்கள். எனவே தொடர்ந்து கவனமுடன் தயாராகுங்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் கை கூடும் வாய்ப்பு உள்ளது.

8 /12

விருச்சிக ராசி பலன் - இந்த வாரம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு வேலையில் வெற்றி கிடைக்கும். அரசுப் பணிகள் நீண்ட நாட்களாக முடங்கிக் கிடந்த நிலையில், இனி எளிதாக பணிகள் நிறைவேறும். இந்த ராசிக்காரர்கள் அலுவலகத்தில், அதிக அளவில் கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளை நடத்த வேண்டி இருக்கும். ஊடகங்களுடன் தொடர்புடையவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

9 /12

தனுசு ராசி பலன் - இந்த வாரம் தனுசு ராசிக்காரர்கள் சில வகையான பிரச்சனைகளில் சிக்கிக் கொள்ள நேரிடலாம். அதிலிருந்து விடுபட உங்கள் அன்புக்குரியவர்களுடன் கலந்துரையாடுங்கள். பித்ரு பக்ஷம் மற்றும் நவராத்திரியின் போது எச்சரிக்கையாக இருங்கள். கவனம் இல்லாமல் எந்த வேலையும் செய்யாதீர்கள். அதன் காரணமாக நீங்கள் வரும் நாட்களில் வருந்த வேண்டியிருக்கும்.

10 /12

மகர ராசி பலன் - இந்த வாரம், மகர ராசிக்காரர்களின் முதலீட்டுத் திட்டம் வெற்றி பெறும். ஆன்மீக நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டியிருக்கும். அங்கு உங்களுக்கு மனதிற்கு பிடித்த வலையில், சரியான சகவாசம் கிடைக்கும். இதனால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.

11 /12

கும்ப ராசி பலன் - கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பதவி உயர்வு கிடைக்கும். தடைபட்ட வேலைகள் நிறைவடையும். பணியிடத்தில் பணிச்சுமையில் நிம்மதி உண்டாகும். பெரிய ஒப்பந்தங்களை நிறைவேற்றுகையில் கவனமாக இருங்கள். முழுமையடையாத பட்ட படிப்பு மற்றும் வேறு விதமான படிப்பை முடிக்க இளைஞர்கள் திட்டமிட்டு, கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.   

12 /12

மீன ராசி பலன்- இந்த வாரம், ஐடி துறையில் பணிபுரியும் மீன ராசிக்காரர்கள் உயர் பதவிகளைப் பெறலாம். இளைஞர்கள் வியாபாரத்திற்காக கடன் வாங்க நேரிடலாம். குடும்பத்துடன் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாரத்தின் தொடக்கத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால், வார இறுதிக்குள் முதலீட்டுத் திட்டமிடல் செய்வது நல்லது. (பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)