ரூ. 171 கோடி மதிப்புள்ள அரவிந்த் கெஜ்ரிவாலின் வீடு! வெளியான புகைப்படங்கள்!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில், அவரது டெல்லி இல்லத்தை பற்றி பார்ப்போம்.

 

1 /6

சமீபத்தில் திகார் சிறையில் இருந்து வெளியே வந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் ஆவேன் என்று கூறியுள்ளார்.  

2 /6

தற்போது டெல்லியின் புதிய முதல்வராக அதிஷி மர்லினா பொறுப்பேற்றுள்ளார். 11 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் ஒரு பெண் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.     

3 /6

அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது டெல்லியில் தனது குடும்பத்தினருடன் அரசு இல்லத்தில் வசித்து வருகிறார். டெல்லியின் முக்கிய பகுதியில் இந்த இல்லம் அமைத்துள்ளது.   

4 /6

வீட்டை சுற்றி மரங்கள், புல்வெளி, சுத்தமான காற்று என இந்த வீடு அமைதியான சூழ்நிலையில் அமைந்துள்ளது. இந்த வீட்டை புதுப்பிப்பதற்கு செலவிடப்பட்ட தொகை சமீபத்தில் சர்ச்சையில் சிக்கியது.  

5 /6

இரண்டு மாடி கட்டிடம் கொண்ட இந்த வீட்டில் மேல் தளம் வாசிப்பதற்கும், கீழ் தளம் அலுவலக வேலைகளை செய்வதற்கும் ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.   

6 /6

வீட்டின் மேல் தளத்தில் நிறைய தங்கும் அறைகள் உள்ளன. இந்த வீட்டை புதுப்பிக்க 45 கோடி ரூபாய் செலவானது என்று கூறப்பட்டது. ஆனால் இதன் உண்மையான மதிப்பு 171 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது.