பிறந்தநாள் பரிசால் நெகிழ்ந்த வடிவேலு: வைரலான வைகைப்புயலின் புகைப்படம்

தமிழ் சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்துள்ள, மனதை லேசாக்கி மகிழவைத்துள்ள நகைச்சுவை நடிகர்களில் வைகை புயல் வடிவேலுவிற்கு தனி இடம் உள்ளது. சிரிக்க வைப்பது சாதாரண விஷயமல்ல. அது ஒரு கலை. அந்த கலையின் மாபெரும் கலைஞன் நடிகர் வடிவேலு என்றால் அது மிகையாகாது. வடிவேலு 1960 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி பிறந்தார். அவரது தாய் வைதீஸ்வரி, தந்தை நடராஜன்.  

1 /4

தற்போது தமிழ் சினிமாவில் வடிவேலு நீண்ட இடைவேளைக்குப் பிறகு ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நிலையில் நேற்று அவரது பிறந்த நாளை ரசிகர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் கொண்டாடினர். இந்த கொண்டாட்டத்தின் ஒரு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது.

2 /4

வடிவேலுவின் இந்த பிறந்தநாளுக்கு  அவருக்கு கிடைத்த ஒரு பரிசு அவரை நெகிழ வைத்தது. அவரது தாயின் ஓவியத்தை பரிசாகப் பெற்றார் வடிவேலு.

3 /4

தாயின் ஓவியத்தைக் கண்ட வடிவேலு நெகிழ்ந்தார். கோடிக்கணக்கான மக்களை சிரிக்க வைத்த முகத்தில் சிறு ஏக்கத்தை காண முடிந்தது. கைபிள்ளை கைக்குழந்தையான தருணம் அது!!

4 /4

நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ள வடிவேலு தன் தாயின் படத்துக்கு பாசமாக முத்தமிட்டார். இங்கு தாயின் மீது அளவுக்கடங்காத நேசம் கொண்ட நேசமணியை காணமுடிந்தது.