பொங்கல் தினத்தில் வெளியாகி வெற்றி பெற்ற விஜய்யின் 4 திரைப்படங்கள்!

இதற்கு முன்னர் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான தளபதி விஜய்யின் 4 படங்கள்.

இதற்கு முன்னர் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான தளபதி விஜய்யின் 4 படங்கள்.

 

1 /4

பைரவா : பரதன் இயக்கத்தில் 2017ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி(ஜனவரி-12) வெளியான படம் 'பைரவா'.  இப்படத்தில்  கீர்த்தி சுரேஷ், சதீஸ், ஜெகபதி பாபு, ஹரிஷ் உத்தமன் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படம் விஜயின் 60வது படமாக அமைந்தது.

2 /4

நண்பன் : ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2012ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி(ஜனவரி-12) வெளியான படம் 'நண்பன்'.  இப்படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, சத்யராஜ், சத்யன் அனுயா ஆகியோர் நடித்துள்ளனர்.  பல இளைஞர்களின் விருப்ப படமாக அன்றிலிருந்து இன்றுவரை இப்படம் திகழ்கிறது.    

3 /4

வில்லு : பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2009ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி (ஜனவரி-12) வெளியான படம் 'வில்லு'.   இப்படத்தில் நயன்தாரா, வடிவேலு, பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.  தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது.  

4 /4

போக்கிரி : பிரபுதேவா இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2007ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி (ஜனவரி-14) வெளியான படம் 'போக்கிரி'.  இப்படத்தில் அசின், பிரகாஷ் ராஜ், நெப்போலியன், நாசர், வடிவேலு, முமைத் கான் ஆகியோர் நடித்துள்ளனர்.  இப்படம் நடிகர் விஜயின் திரையுலக வரலாற்றில் மிகச்சிறந்த மைல்கல்லை தொட்டது.  இந்த திரைப்படம் இன்றுவரை ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வருவது கூடுதல் சிறப்பானது.