சவுக்கு சங்கரின் வாழ்க்கையை திரைப்படமாக எடுக்கும் வெற்றிமாறன்?

சவுக்கு சங்கர் இணையத்தில் புகழ்பெற்ற ஒரு நபர். விஜிலென்ஸ் மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநரகத்தில் (டிவிஏசி) முன்னாள் கீழ்ப்பிரிவு எழுத்தராக இருந்த அவர் தற்போது இணைய பத்திரிக்கை நடத்தி வருகிறார்.

 

1 /5

மாநில மற்றும் மத்திய அரசுகளை தீவிரமாக கேள்வி கேட்கும் சில பிரபலமான நபர்களில் சவுக்கு ஷங்கரும் ஒருவர். தற்போது, ​​சவுக்கு ஷங்கர் விரைவில் இயக்குனர் வெற்றிமாறனுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   

2 /5

சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஷங்கரிடம் அவரது வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு யார் படம் எடுக்க முடியும் என்று கேட்கப்பட்டது, அது வெற்றிமாறன் என்று அவர் உடனடியாக பதிலளித்தார். இது தொடர்பாக வெற்றிமாறனுடன் ஏற்கனவே உரையாடியதாகவும், அவரது தற்போதைய பொறுப்புகளுக்குப் பிறகு சவுக்கு சங்கரின் வாழ்க்கை வரலாற்றில் பணியாற்றுவதாக வெற்றிமாறன் உறுதியளித்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.  

3 /5

இந்த வைரலான வீடியோவில், சவுக்கு ஷங்கர் தனது வாழ்க்கை வரலாற்றில் தனுஷை கதாநாயகனாகப் பார்க்க விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். தனுஷ் தற்போது நடித்துவரும் அனைத்து படங்களிலும் பல்வேறு பரிணாமங்களையும், புதுமைகளையும் வெளிக்காட்டி வருகிறார்.   

4 /5

இதனால் எந்த விதாமன கதை களத்திற்கு தனுஷ் செட் ஆவார் என்ற எண்ணம் அனைவரிடமும் பொதுவாக காணப்படுகிறது. அதுமட்டும் இன்றி இந்த வாழ்க்கை வரலாற்று படத்தில் தனுஷ் நடித்தால் அதிலும் பல புதுமைகளை காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.  

5 /5

தற்போது வெற்றிமாறன் 'விடுதலை 2' படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். விடுதலை 2 படத்திற்குப் பிறகு சூர்யா நடித்த 'வாடிவாசல்' மற்றும் தனுஷின் 'வட சென்னை 2' படங்களை இயக்க உள்ளார்.