வீட்டிற்கு தரித்திரத்தை கொண்டு வரும் ‘இந்த’ செடிகள் வேண்டாமே!

சில செடிகளை வீட்டுக்குள்ளோ அல்லது அருகிலோ நடக்கூடாது என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளன. அதாவது, இந்த செடிகள் இருந்தால், அந்த வீட்டில் உள்ளவர்கள், நோய், நிதி பிரச்சனைகள் மற்றும் பிற பிரச்சினைகளால் பாதிக்கப்படலாம்.

1 /6

வீடு மற்றும் சுற்றுப்புறத்தை அலங்கரிக்க பல்வேறு செடிகளை நடுகிறோம். ஆனால், சில செடிகள் வீட்டிற்கு எதிர் மறை ஆற்றலை கொண்டு வரும். இதனால், வாழ்க்கையில் வறுமை, நோய் போன்றவை ஏற்படலாம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் எந்தெந்த செடிகளை வீட்டில் நடக்கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.

2 /6

பேரீச்சம்பழம் : பேரீச்சம்பழம் நம் உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்றாலும், அவற்றை வீட்டில் நடுவது சரியல்ல. வாஸ்து படி, வீட்டில் பேரீச்சம் பழ மரங்களை நடுவதால் குடும்ப உறுப்பினர்கள் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.

3 /6

புளிய மரம்: புளி நம் உணவுக்கு சுவை சேர்க்கிறது, ஆனால் புளியஞ் செடி உங்களையும் உங்கள் வீட்டையும் எதிர்மறை சக்தியினால் நிரப்பி விடும். இது வீட்டில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் குடும்பத்தில் ஒற்றுமையை பாதிக்கிறது.

4 /6

கற்றாழை செடி: வாஸ்து சாஸ்திரப்படி வீட்டில் கற்றாழையை நடக்கூடாது. கற்றாழை எதிர்மறை ஆற்றலை வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. வீட்டில் வசிப்பவர்களுக்கு கற்றாழை துரதிர்ஷ்டத்தைத் தரும்.

5 /6

பொன்சாய் செடிகள்: பொன்சாய் செடிகள் கண்ணுக்கு எவ்வளவு அழகாக இருக்கிறதோ, அதே அளவு எதிர் மறை ஆற்றலை கொடுக்க கூடியது. அதனால்தான் இதை வீட்டில்  வைக்கக் கூடாது.  

6 /6

மருதாணி செடிகள்: மருதாணி உங்கள் கைகளுக்கு நிறத்தை சேர்க்கும், அழகை அதிகரிக்கவும் மற்றும் முடி ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் உதவும். ஆனால் வீட்டைச் சுற்றி மருதாணி செடி இருப்பது நல்லதல்ல. மருதாணி செடியில் தீய சக்திகள் வசிக்கின்றன. இந்த காரணத்திற்காக, அதை வீட்டை சுற்றி நடப்படக்கூடாது. ( பொறுப்பு: இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் பல்வேறு தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஜீ மீடியா உறுதிப்படுத்தவில்லை. வாஸ்து நிபுணர்களிடம் இது தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெறலாம்.)