தமிழ் சினிமாவில் லதா மங்கேஷ்கர் பாடிய ஹிட் பாடல்கள்

இசைக்குயில் லதா மங்கேஷ்கர் 1942 ஆம் ஆண்டு தன் திரைப்பயணத்தை ஆரம்பித்தார். கடந்த 60 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் பாடிக்கொண்டிருந்த லதா அவர்கள் கிட்டத்தட்ட 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு , ஹிந்தி, கன்னடா போன்ற பல மொழிகளில் பல்லாயிர கணக்கான பாடல்களை பாடிய லதா தமிழில் மூன்றே மிகவும் குறைந்த பாடல்கள் மட்டுமே பாடியுள்ளார். எனவே தமிழில் லதா மங்கேஷ்கர் பாடிய பாடல்களின் தொகுப்பை இங்கே காண்போம்…

இந்திய சினிமாவில் புகழ்பெற்ற பாடகி லதா மங்கேஷ்கர். கொரோனா தொற்று காரணமாக சிகிச்சை பெற்றுவந்த லதா மங்கேஷ்கர் கடந்த 2022 ஆம் ஆண்டு இன்றைய தினத்தில் உயிரிழந்தார். இசை குயில் என அனைவராலும் போற்றப்படும் லதா மறைந்தாலும் அவரது குரல் இசையுலகம் இருக்கும் வரை ஒலித்துக்கொண்டே இருக்கும்.

1 /5

எந்தன் கண்ணாளன் (படம் : வானரதம்): 1955-ம் ஆண்டு திலீப் குமாரின் நடிப்பில் 'உரன் கடோலா’ என்ற இந்திப் படத்தின் டப் படம் தான் தமிழில் வெளியான ‘வான ரதம்’ . இதில் ’எந்தன் கண்ணாளன்’ பாடலை கம்பதாசன் வரிகளில் பாடினார் லதா. பாடலுக்கு இசை நவ்ஷத்.

2 /5

ஆராரோ ஆராரோ (படம் : ஆனந்த் ): இளையராஜா இசையில் , சிவாஜி ப்ரொடக்க்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு நடித்து வெளிவந்த படம் ஆனந்த். இப்படத்தில் இடம்பெற்ற ஆராரோ ஆராரோ பாடல்தான் தமிழில் லதா மங்கேஷ்கர் பாடிய பாடலாகும்.

3 /5

வளையோசை கலகலவென (படம் : சத்யா): 1988 ஆம் ஆண்டு வெளிவந்த சத்யா படத்தில் தனது தமிழ் பாடலை பாடினார் லதா. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளிவந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.  

4 /5

எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் (படம் : என் ஜீவன் பாடுது ): லதா மங்கேஷ்கர் என் ஜீவன் பாடுது படத்தில் இடம்பெற்ற எங்கிருந்தோ அழைக்கும் என் ஜீவன் எனும் பாடல். இப்படத்திற்கும் இளையராஜா தான் இசையமைத்திருந்தார். 

5 /5

ஏ.ஆர்.ரஹ்மானுடன் பணியாற்றினார்: 2006-ம் ஆண்டு இந்தியில் வெளியான ‘ரங் தே பசந்தி’ படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படத்தில் இடம் பெற்றிருக்கும் ‘லூகா சூப்பி’ என்ற பாடலை ரஹ்மானுடன் இணைந்து பாடிருக்கிறார் லதா மங்கேஷ்கர்.