Lollu Sabha Seshu: பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேசு உடல்நல குறைவு காரணமாக தற்போது உயிரிழந்துள்ளார்.
விஜய் டிவியின் லொள்ளு சபா நிகழ்ச்சி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேசு.
இவர் அதிகம் சந்தானம் நடிக்கும் படங்களில் நடித்து வந்தார். சந்தானம் நடிப்பில் வெளியான டிக்கிலோனா, பாரிஸ் ஜெயராஜ்,.வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவரது காமெடி டயலாக்குகளுக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும், இவர் பல மீம் டெம்ப்ளேட்டுகளிலும் அடிக்கடி வந்து செல்வார்.
இன்னிலையில் உடல்நல குறைவு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேசு தற்போது உயிரிழந்துள்ளார்.
இவரது உடலை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வது அல்லது சென்னையிலேயே இருந்து சடங்கு செய்வதா என்று குடும்பத்தினர் ஆலோசனை செய்து வருகின்றனர்.