அமெரிக்க கிராண்ட்ஸ்லாம் வெல்ல வேண்டுமென்ற பிரிட்டனின் நீண்ட கால காத்திருப்புக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் எம்மா ரடுகானு.
அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டத்தை தனது 18 வயதில் வென்று சாதனை புரிந்திருக்கிறார் எம்மா ரடுகானு. 44 ஆண்டுகளுக்கு பிறகு கிராண்ட் ஸ்லாம் வென்ற பிரிட்டன் வீராங்கனை எம்மா ரடுகானு.
Also Read | மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு சென்ற பின் குடும்பத்துடன் உல்லாசமாய் Cristiano Ronaldo
ரத்தம், வியர்வை மற்றும் இறுதியில் ஒரு சில துளி கண்ணீர் தேவைப்பட்ட வெற்றி இது. 18 வயது வீராங்கனை கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றார். இதற்கு முன்னதாக விர்ஜினியா வேட் 1977 இல் விம்பிள்டனில் கிராண்ட் ஸ்லாம் போட்டியில் வெற்றி பெற்றார். அவருக்கு பிறகு இத்தனை ஆண்டுகள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தார எம்மா. (Photograph:Reuters)
ரடுகானுவின் வெற்றிக்கு முதல் மரியாதை கிடைப்பது ஒரு பக்கம். முதலில் பிரிட்டன் அரசியும் அரச குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களும் ட்விட்டரில் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். (Photograph:Reuters)
திங்கட்கிழமை உலக தரவரிசையில் 150 வது இடத்தை பிடித்திருந்த எம்மா ரடுகானு தற்போது 23 வது இடத்திற்கு முன்னேறிவிட்டார். கிராண்ட் ஸ்லாம் வெல்ல வேண்டும் என்று லட்சியத்துடன் உழைத்தேன். ஆனால், உண்மையில் ஒரு கிராண்ட் ஸ்லாம் வென்றதை என்னால் நம்ப முடியவில்லை" என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் எம்மா. (Photograph:Reuters)
முதல் கிராண்ட்ஸ்லாம் இறுதியில் ரடுகானு மற்றும் போட்டிக்கு செல்லும் தரவரிசையில் 73 வது இடத்தில் இருந்த பெர்னாண்டஸ் ஆகியோர் மோதினார்கள். (Photograph:Reuters)
ஒரு செட் கூட விட்டுக் கொடுக்காமல், அமெரிக்க ஒப்பன் டென்னிஸ் தொடரை வென்ற எம்மா, உலகிலேயே மிக இளம் வயதில் கிராண்ட் ஸ்லாம் வென்ற வீராங்கனை என்ற பெயரையும் பெற்றுள்ளார். (Photograph:Reuters)