Miss Japan! உக்ரைன் பெண்ணுக்கு ஜப்பான் அழகி பட்டம்! வைரலாகும் அழகிப்போட்டி சர்ச்சைகள்

Miss Japan Controversy: ஜப்பானியர் என்றால் யார்? இந்த சர்ச்சை இன்று சமூக ஊடகங்களில் மிகவும் பேசப்படும் விவாதமாக மாறிவிட்டது. உக்ரைனில் பிறந்த மாடல் அழகி, மிஸ் ஜப்பான் என்ற ஜப்பான் அழகி பட்டத்தை பெற்றது பேசுபொருளாகிவிட்டது.

ஜப்பானில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, இளைஞர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவது உலகம் அறிந்தது தான். ஜப்பானில் வேலை செய்ய வெளிநாட்டவர் தேவைப்படலாம். ஆனால், அதற்காக அழகான பெண் என்ற பட்டத்தைப் பெறுவதற்கும் வெளிநாட்டினர் தேவையா என்ற கேள்விகள் வைரல் ஆகின்றன...

1 /8

உக்ரேனிய நாட்டில் பிறந்த மாடல் அழகி, மிஸ் ஜப்பானாக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தோஷத்தைக் கூட கொண்டாட முடியாமல் சர்ச்சைகளை எதிர்கொள்கிறார். அவர் ஜப்பானிய மொழியில் பேசுகிறார் என்றாலும், ஐரோப்பிய தோற்றம் தொடர்பாக சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்

2 /8

இனம் தொடர்பான கேள்விகள் முதல் அடையாளச் சிக்கல்கள் வரை, மிஸ் ஜப்பான் போட்டியின் வெற்றியாளர் கரோலினா ஷினோ அனைத்தையும் எதிர்கொள்கிறார். 

3 /8

அழகியாக பட்டம் வென்றாலும், அவரது வெற்றியைப் பற்றி மக்கள் மகிழ்ச்சியடையவில்லை. அவர் போட்டியில் வென்று முடிசூட்டப்பட்டபோதும், கரோலினா ஜப்பானியராக ஏற்றுக்கொள்ளப்படாததால் கண்ணீர் சிந்துவதைக் காண முடிந்தது

4 /8

மிஸ் ஜப்பான் 2024 கரோலினா ஷினோ யார்? உக்ரைனில் வசிக்கும் 26 வயதான மாடல் அழகி கரோலினா ஐந்து வயதில் ஜப்பானுக்கு குடிபெயர்ந்து, நகோயாவில் வளர்க்கப்பட்டாள். போட்டியில் வென்ற இவர் ஜப்பானிய குடிமகனாக இருந்தாலும், அவரது தோற்றம் ஐரோப்பியரைப் போல இருப்பதால் கேள்விகள் எழுகின்றன

5 /8

அரியானா மியாமோடோ 2015 ஆம் ஆண்டில் மிஸ் ஜப்பான் பட்டம் பெற்ற கலப்பினப் பெண்ணாக ஆன சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கரோலினா மிஸ் ஜப்பான் பட்டம் வென்றுள்ளார்.  அப்போது, அரியானாவின் தாய் ஜப்பானியர், அவரது தந்தை ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர்.  

6 /8

மிஸ் ஜப்பான் ஆக தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் ஜப்பானியர் அல்ல, 100% உக்ரைனியர். அவர் அழகானவர், ஆனால் மிஸ் ஜப்பான் என்று தேர்ந்தெடுக்கப்பட்ட பெண்ணிடம் ஜப்பானியம் எங்கே? என்று கேள்விகள் எழுகின்றன

7 /8

கரோலினாவின் வெற்றி நாட்டில் உள்ள மற்றவர்களுக்கு "தவறான செய்தியை" அனுப்புவதாக பலரு கருதுகின்றனர். ஐரோப்பிய தோற்றமுடைய நபர் மிகவும் அழகான ஜப்பானியர் என்று அழைக்கப்படும்போது ஜப்பானியர்கள் இயற்கையாகவே தவறான செய்தியைப் பெறுவார்கள் என்று கவலைகள் எழுப்பப்படுகின்றன

8 /8

கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட கரோலினா, "ஜப்பானியராகத் தெரியவில்லை" என்றாலும், ஜப்பானில் வளர்ந்ததால் அவரது மனம் "ஜப்பானியராகிவிட்டது" என்று தெரிவித்திருந்தார். மிஸ் ஜப்பான் 2024 பட்டத்தை வெல்வது "வாழ்நாள் கனவு" என்று கூறினார். "இந்தப் போட்டியில் ஜப்பானியராக அங்கீகரிக்கப்பட்டது என்னை நன்றியுணர்வுடன் நிரப்புகிறது," என்று கரோலினா கூறுகிறார்