இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத், 60 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக பிரிட்டன் நாடாளுமன்றத்தின் சம்பிரதாயபூர்வமான தொடக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ளவில்லை. இது அவரது 70 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வருவதைக் குறிப்பதாக பார்க்கப்படுகிறது.
பக்கிங்ஹாம் அரண்மனையின் அறிக்கைப்படி, உடல்நிலை சரியில்லாதாததாலும் முதுமை காரணமாகவும் ராணி இரண்டாம் எலிசபெத் நாடாளுமன்ற தொடக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொள்ள மாட்டார் என்று அறிவித்தது (Photograph:AFP)
ராணி இல்லாத நாடாளுமன்ற அமர்வில் பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்துக் கொண்டார். கடந்த வாரம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியினர் மீதான ஊழல் குற்றச்சாட்டு மற்றும் மோசமான முடிவுகளால் தள்ளாடிக்கொண்டிருக்கிறார் போரிஸ் ஜாக்சன். வரவிருக்கும் நாடாளுமன்ற அமர்வு, தற்போதைய அரசாங்கத்தின் மூன்றாவது அமர்வு, மே 2024 க்குள் வரவிருக்கும் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஜான்சனின் முக்கிய கொள்கை வாக்குறுதிகளை வழங்குவதற்கான கடைசி வாய்ப்புகளில் ஒன்றாகும். (Photograph:AFP)
அரியணை ஏறுபவர் என்று கருதப்படும் இளவரசர் சார்லஸ் வாகனத்தை விட்டு இறங்கியதும் ஆராவரங்கள் எழுந்தன. "காட் சேவ் தி குயின்" என்ற தேசிய கீதம் இசைக்கப்பட்டது. (Photograph:AFP)
வேல்ஸ் இளவரசரான சார்லஸ், அவரது மூத்த மகன் இளவரசர் வில்லியம் என அரச வாரிசுகள் நாடாளுமன்ற தொடக்க நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டனர். (Photograph:AFP)
கடந்த அக்டோபர் மாதத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராணி இரண்டாம் எலிசபெத், தற்போது பொது நிகழ்ச்சிகளில் அதிகம் கலந்துக் கொள்வதில்லை. கடந்த பிப்ரவரியில் கோவிட்-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் நடக்க முடியாமல் சிரமப்படுவதாக கூறப்படுகிறது. இங்கிலாந்து ராணியாக பதவியேற்ற பிறகு, கர்ப்பமாக இருந்த 1959 மற்றும் 1963 என இரண்டு முறை மட்டுமே, நாடாளுமன்ற தொடக்க நிகழ்வுகளில் ராணி இரண்டாம் எலிசபெத் கலந்துக் கொள்ளவில்லை. அடுத்த மாதம் தனது பிளாட்டினம் ஜூபிலியைக் கொண்டாடும் பொதுக் கொண்டாட்டங்களில் ராணி பங்கு வகிக்க முடியாமல் போகலாம் என்றும் கூறப்படுகிரது. (Photograph:AFP)