மே 2024: அதிக EV பைக்குகளை விற்ற டாப் 8 நிறுவனங்கள்!

2024ஆம் ஆண்டின் மே மாதத்தில் அதிக எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்த டாப் 8 நிறுவனங்கள் குறித்து இங்கு காணலாம்.

  • Jun 20, 2024, 15:12 PM IST

எலெக்ட்ரிக் பைக்குகளும் தற்போது மக்களிடைய அதிக வரவேற்பை பெற்றுள்ளது. 

 

1 /8

8. BGauss: இந்தாண்டு மே மாதம் 1,158 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. கடந்தாண்டு மே 1,814 பைக்குகள் விற்பனையாகின. அதாவது, மொத்தம் 656 யூனிட்கள் குறைவாக விற்பனையாகி உள்ளது.   

2 /8

7. WardWizard: கடந்தாண்டு மே மாதம் 364 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு மே மாதம் 1,261 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. மொத்தம் 897 யூனிட்கள் அதிமாகி உள்ளது.   

3 /8

6. Greaves EV: இந்தாண்டு மே மாதம் 1,956 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. இது கடந்தாண்டு 1,155 யூனிட்கள் மட்டுமே விற்றது. இந்தாண்டு மே மாதத்தில் 801 யூனிட்கள் அதிகமாக விற்பனையாகி உள்ளது.  

4 /8

5. Hero Electrics: கடந்தாண்டு மே மாதம் 751 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு மே மாதத்தில் 2,456 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. மொத்தம் 1,705 யூனிட்கள் அதிகமாகும்.   

5 /8

4. Ather: கடந்தாண்டு மே 15 ஆயிரத்து 430 யூனிட்கள் விற்பனையான நிலையில், இந்தாண்டு மே மாதத்தில் 6,405 யூனிட்கள் மட்டுமே விற்பனையாகி உள்ளது. மொத்தம் இந்தாண்டு 9 ஆயிரத்து 385 யூனிட்கள் சரிவை சந்தித்துள்ளன.  

6 /8

3. Bajaj: இந்த நிறுவனம் கடந்தாண்டு மே 10 ஆயிரத்து 97 யூனிட்கள் விற்பனை செய்த நிலையில், இந்தாண்டு மே மாதத்தில் 9 ஆயிரத்து 214 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. அதாவது மொத்தம் 883 யூனிட்கள் குறைந்துள்ளது.   

7 /8

2. TVS: இந்த நிறுவனம் கடந்தாண்டு மே 20 ஆயிரத்து 434 யூனிட்கள் விற்பனை செய்த நிலையில், இந்தாண்டு மே மாதத்தில் 11 ஆயிரத்து 788 யூனிட்கள் விற்பனையாகி உள்ளது. மொத்தம் 8 ஆயிரத்து 646 யூனிட்கள் குறைவாக விற்பனையாகி உள்ளது.   

8 /8

1. Ola: இந்த நிறுவனம் கடந்தாண்டு மே மாதம் 28 ஆயிரத்து 7 யூனிட்கள் விற்பனை செய்த நிலையில், இந்தாண்டு மே மாதம் 37 ஆயிரத்து 225 யூனிட்கள் விற்பனை செய்துள்ளது. அதாவது 8 ஆயிரத்து 483 யூனிட்கள் அதிகமாக விற்பனையாகி உள்ளது.