Relationship Tips: திருமண உறவில் பிரச்னை இல்லாமல் வைத்திருப்பது எப்படி என பலரும் யோசிப்பீர்கள்... அந்த வகையில், இரவுக்கு தம்பதிகள் இருவரும் படுக்கையில் தூங்கச் செல்வதற்கு முன் இந்த ஒரு விஷயத்தை கடைபிடித்தால் நிச்சயம் உங்களுக்குள் வரும் பிரச்னை குறையும். அதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
திருமண உறவில் வரும் பிரச்னைகள் என்பது இயல்பானதுதான். அந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே முக்கியமானது. இருப்பினும், சில பிரச்னைகளை வராமல் தடுப்பதற்கு தங்களின் அன்றாட வாழ்வில் தம்பதிகள் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
திருமண வாழ்வு என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் முக்கியமான காலகட்டமாகும். திருமணம் உறவு என்பது உங்களின் மொத்த வாழ்வையும் தலைகீழாக மாறவும் வாய்ப்பிருக்கிறது.
திருமண உறவை ஆரோக்கியமான ஒன்றாக அமைத்துக்கொள்வது தம்பதியர்களின் கைகளிலேயே இருக்கிறது. தம்பதியர்கள் தங்களின் குடும்ப உறவில் எவ்வளவு நேரமும், கவனமும் செலுத்துகிறார்களோ அந்தளவிற்கு அவர்களின் உறவு வலுப்படும்.
திருமண உறவில் சண்டை வருவதும் இயல்புதான். சண்டையில்லாத உறவு என்றால் அங்கு போலித்தனம் புகுந்துவிட்டது என்றாகிவிடும். சண்டைகளும் முரண்பாடுகளும் இருந்தால் மட்டுமே உறவு அடுத்த கட்டத்திற்கு நகரும்.
இருப்பினும், திருமண உறவில் ஏற்படும் சண்டைகளுக்கும், பிரச்னைகளுக்கும் உடனடியாக தீர்வை தேடுவதும் முக்கியமாகும்.
எந்த பிரச்னையையும் ஆறப்போடமல் உடனுக்குடன் பேசியோ அல்லது நிதானம் அடைந்த பின்னரோ பேசிக்கொள்வதே சரியாக இருக்கும்.
அந்த வகையில், திருமண உறவில் அடிக்கடி பிரச்னை வராமல் இருக்க ஒரு சில விஷயங்களை தம்பதிகள் தங்களின் அன்றாட வாழ்வில் பின்பற்றியாக வேண்டும்.
அதாவது, திருமண உறவில் ஏற்படும் கருத்து வேறுபாடு, தவறான புரிதல், சந்தேகம், நம்பிக்கையின்மை ஆகிய பிரச்னைகளை தவிர்க்க தம்பதிகள் படுக்கைக்கு செல்லும் இந்த ஒரு விஷயத்தை செய்தாலே பெரிய நன்மைகள் ஏற்படும்
எப்போதும் இரவில் தூங்கச் செல்லும் முன் தம்பதிகள் தங்களுக்குள் உரையாட வேண்டியது அவசியம். அதாவது, அன்றைய தினம் என்ன நடந்தது என மனைவியிடம் கணவன் கேட்க வேண்டும். அதேபோல் அன்று தனக்கு நடந்தவை குறித்தும் மனைவியிடம் அவர் சொல்ல வேண்டும். இந்த தகவல் பரிமாற்றம் பல பிரச்னைகளை தவிர்க்கும். எதையும் மறைக்காமல் இருப்பதால் கருத்து வேறுபாடோ, ஏமாற்றமோ திருமண உறவில் ஏற்படாது. (பொறுப்பு துறப்பு: இது பொதுவான தகவல் அடிப்படையில் எழுதப்பட்டது. திருமண வாழ்வில் ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க வல்லுநர்களிடம் ஆலோசனை மேற்கொள்ள வேண்டும். இதனை Zee News உறுதிசெய்யவில்லை)