சிஎஸ்கேவின் இந்த 3 சிங்கங்கள்... மெகா ஏலத்தில் கேகேஆர் கொக்கிக் போட்டு தூக்கும்!

IPL 2025 Mega Auction: ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி  (CSK) விடுவிக்கும்பட்சத்தில் இந்த மூன்று வீரர்களை எடுக்க கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (KKR) நிச்சயம் முயற்சிக்கும். அவர்கள் குறித்து இங்கு காணலாம்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (Kolkata Knight Riders) மெகா ஏலத்தை முன்னிட்டு பல வீரர்களை விடுவிக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் (Chennai Super Kings) இருந்து மெகா ஏலத்திற்கு வரும் சில வீரர்களை நிச்சயம் கேகேஆர் அணி நிர்வாக எடுக்க நினைக்கும். அதில் முக்கிய மூன்று வீரர்கள் யார் யார் என்பதை இங்கு பார்க்கலாம்.

1 /8

இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனும் ஐபிஎல் டி20 லீக் தொடர் ஒவ்வொரு ஆண்டும் புது பொலிவுடன், சிறப்பான முறையில் நடத்தப்படும். அதிலும் அடுத்தாண்டு ஐபிஎல் கூடுதல் ஸ்பெஷலான ஒன்றாக பார்க்கப்படுகிறது.   

2 /8

ஐபிஎல் 2025 சீசனை (IPL 2025) முன்னிட்டு மெகா ஏலம் நடத்தப்பட உள்ளது. இந்த ஏலத்தின் விதிகள், அணிகள் எத்தனை வீரர்களை தக்கவைக்கலாம், ஏலம் நடைபெறும் நாள் மற்றும் இடம் உள்ளிட்டவை இன்னும் அறிவிக்கப்படவில்லை.  

3 /8

இதனால், ஒவ்வொரு அணியும் ஐபிஎல் நிர்வாகத்தின் அறிவிப்பை எதிர்நோக்கி காத்திருக்கின்றன. அதன்படியே எந்தெந்த வீரர்கள் யார் யாரை தக்கவைப்பார்கள், விடுவிப்பார்கள் என்பது  வெளிவரும்.   

4 /8

இருப்பினும், இப்போதே ஒவ்வொரு அணிகள் யார் யார் விடுவிக்கும் என்பதில் தொடர்ந்து தகவல்கள் வெளியாகி உள்ளன. எனவே, ஒரு அணி விடுவிக்கும் வீரர்களை மற்றொரு அணி நிச்சயம் நல்ல தொகைக்கு எடுக்க நினைக்கும்.   

5 /8

அந்த வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணி ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் (IPL 2025 Mega Auction) இந்த விடுவித்தால், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி (Kolkata Knight Riders) இந்த மூன்று வீரர்களை நிச்சயம் எடுக்க முயற்சிக்கும். அவர்கள் குறித்து இங்கு காணலாம்.   

6 /8

மிட்செல் சான்ட்னர்: சுனில் நரைன், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் இருந்தாலும் சான்ட்னர் (Mitchell Santner) கொல்கத்தாவுக்கு நிச்சயம் தேவைப்படுவார். இடதுகை சுழற்பந்துவீச்சாளர்களுக்கு டிமாண்ட் இருக்கும் என்பதால் கேகேஆர் அணி சான்ட்னரை நல்ல தொகைக்கு எடுக்க முயற்சிக்கும்.  

7 /8

முஸ்தபிஷூர் ரஹ்மான்: மிட்செல் ஸ்டார்க்கை நிச்சயம் கொல்கத்தா அணி தக்கவைக்காது எனலாம். எனினும் அவருக்கு RTM கார்டை கேகேஆர் அணி பயன்படுத்தலாம். இருப்பினும் விலை சற்று அதிகமாக இருக்கும்பட்சத்தில் வெளிநாட்டு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்களுக்கு கேகேஆர் நிச்சயம் குறிவைக்கும். பவர்பிளே மற்றும் டெத் ஓவர்களில் சீரும் சிறப்புமாக வீசும் சிஎஸ்கேவின் முஸ்தபிஷூர் ரஹ்மானை (Mustafizur Rahman) கேகேஆர் தட்டித்தூக்காமல் விடாது.   

8 /8

சிமர்ஜித் சிங்: ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா ஆகிய இந்திய இளம் வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரைதான் கேகேஆர் அணியால் தக்கவைக்க முடியும் என்றால் நிச்சயம் ஒரு நல்ல இளம் இந்திய வேகப்பந்துவீச்சாளருக்கு ஏலத்தில் முழு வீச்சில் கொல்கத்தா செல்லும். அதில் சிஎஸ்கேவுக்கு கடந்த சீசனில் சிறப்பாக செயல்பட்ட சிமர்ஜித் சிங் (Simarjeet Singh) மீது கேகேஆர் ஒரு கண்ணை வைத்திருக்கும். தீபக் சஹார் (Deepak Chahar), துஷார் தேஷ்பாண்டே (Tushar Deshpande) ஏலத்தில் வந்தாலும் கேகேஆர் அவர்களை விடாது.