திருப்பதி லட்டு விவகாரம்: தோஷம் நீங்க... மாலை 6 மணிக்கு இதை செய்யுங்க - தேவஸ்தானம்

Tirupati Temple Laddu: பிரசித்தி பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் வழங்கப்படும் லட்டுவில், விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு அறிவுரை ஒன்று தற்போது வழங்கப்பட்டுள்ளது.  

  • Sep 23, 2024, 16:56 PM IST

ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயில் நாட்டில் அதிக இந்து மத பக்தர்கள் கூடும் ஆன்மீக தலங்களில் ஒன்றாகும். பக்தர்கள் மட்டுமின்றி அங்கு பணமும் அதிகம் குவியும் என்பதால் பெரும் கவனம் பெறும் ஆன்மீக தலமாகும்.

 

1 /8

திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் பிரசாதமாக லட்டு (Tirupati Temple Laddu) வழங்கப்பட்டு வருகிறது. இந்த திருப்பதி லட்டுதான் கடந்த ஒரு வார காலமாக வைரலாகி வருகிறது.   

2 /8

திருப்பதி லட்டுவை தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டிறைச்சி கொழுப்பு, மீன் எண்ணெய், பன்றிக் கொழுப்பு ஆகியவற்றின் எச்சங்கள் தெரிந்ததாக ஆய்வில் தகவல் தெரியவந்துள்ளது.   

3 /8

இது கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாக தற்போதைய முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியிருந்தார்.   

4 /8

மேலும், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் (Tirumala Tirupati Devasthanam) கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவையும் அவர் அமைத்துள்ளார். 

5 /8

இது ஒருபுறம் இருக்க, இன்று திருப்பதி வெங்கடாசலபதி கோயிலில் சாந்தி யாகம் அர்ச்சகர்களால் நடந்தப்பட்டது.   

6 /8

கலப்பட நெய்யை பயன்படுத்தியதால் ஏற்பட்ட தோஷத்தை நீக்கவும், பக்தர்களின் நலனுக்காகவும் இந்த யாகம் நடத்தப்பட்டதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.   

7 /8

மேலும், திருப்பதி கோயில் லட்டுவில் சேர்க்கப்பட்ட கலப்பட நெய்யால் ஏற்பட்ட தோஷம் நீக்குவதற்காக, இன்று மாலை 6 மணிக்கு பக்தர்கள் அனைவரும் தங்கள் வீடுகளில் பூஜை செய்யும்போது விளக்கேற்றி 'ஓம் நமோ வெங்கடேசாய, ஓம் நமோ நாராயணாய, ஓம் நமோ பகவதே நமஹ' என்று மந்திரம் (Kshama Mantra) படிக்க திருமலை திருப்பதி தேவஸ்தானம் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளது.   

8 /8

நீங்கள் மந்திரத்தை உச்சரித்து விளக்கேற்றி வழிபாடு செய்தால், கலப்பட நெய் மூலம் தயாரிக்கப்பட்ட லட்டு பிரசாதத்தை சாப்பிட்டதால் பக்தர்களுக்கு ஏற்பட்ட தோஷம் விலகும் என்பது நம்பிக்கை என திருமலை திருப்பதி தேவஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.