In pics:திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோத்சவ விழா திருமஞ்சனம்

கொரோனா வைரஸால் உலகமே தலைகீழாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அதன் தாக்கம் இறை வழிபாட்டிலும் எதிரொலிக்கிறது. ஆனால் வழிபாடுகள் விமரிசையாக இல்லாவிட்டாலும், சம்பிரதாயப்படி எந்தவித குறையும் இன்றி நடைபெறுகிறது. குறையொன்றும் இல்லை கோவிந்தா.... என்ற பாடலுக்கு ஏற்ப குறையொன்றும் இல்லாமல் ஏழுமலையானுக்கு நித்திய பூசைகள் மட்டுமல்ல, புரட்டாசி மாத சிறப்பு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. கண்டு ரசித்து ஆனந்தம் பெறுங்கள்... 

திருப்பதி ஏழுமலையானுக்கு தினசரி கோலகலமாக பூசைகள் நடைபெறும். அதிலும், புரட்டாசி மாதம் மிகவும் சிறப்பான முறையில் பிரம்மோத்சவ விழா கொண்டாடப்படும். ஆனால் இந்த முறை கொரோனா வைரஸின் தாக்கத்தால், பக்தர்கள் இன்றி, வெளிப் பிராகரத்தில் வீதி உலா இல்லாமால் ஆலயத்திற்குள்ளேயே விழா கொண்டாடப்படுகிறது. அதன் ஒரு சில காட்சிகளை பார்த்து ஏழுமலையானின் கடைக்கண் ஆசியைப் பெறுங்கள்...

1 /6

திருமலை திருப்பதி: ஸ்ரீ மலையப்ப சுவாமியின் புனித  திருமஞ்சனம் பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. வண்ணமயமான மாலைகள் மற்றும் கிரீடங்கள் கொண்டும், மயில் இறகுகள் கொண்டும் அலங்காரங்கள் செய்யப்பட்டன. திருமஞ்சனத்தின் புனித நிகழ்வு ஸ்ரீவாரி கோவிலில் உள்ள ரங்கநாயக்குலா மண்டபத்தில் கங்கநபட்டர் ஸ்ரீ கோவிந்தாச்சார்யுலுவின் வழிகாட்டுதலில், வேத மந்திர முழக்கங்களுக்கு இடையே பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.

2 /6

ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு திருமஞ்சனம் செய்து அலங்காரம் செய்து ஆரத்தி எடுக்க இரண்டு மணி நேரம் ஆனது. சடங்குகள் செய்யப்பட்டு, வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டு,  வண்ணமயமான மாலைகள் மற்றும் கிரீடங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு ஜெகஜோதியாய் அருள் வழங்கினார் வெங்கடாசலபதி.   பல்வேறு விதமான பழங்கள், அன்னாசிப்பழம், கருப்பு வெல்வெட், முத்துக்கள், நெல்லிக்கனி, நந்திவர்தனம், மயில் இறகுகள் மற்றும் ரோஜா இதழ்கள் ஆகியவற்றால் செய்யப்பட்ட மாலைகள் கோவிந்தனுக்கு சாற்றப்பட்டன. மனம் நிறையும் மலையப்ப சுவாமியின் திருக்கோலக் காட்சி...

3 /6

திருமஞ்சனத்தின் தளமான ரங்கநாயக்குலா மண்டபம் பாரம்பரிய முறைப்படி அலங்கரிப்பட்டுள்ளது. பூக்கள், சோளம் மற்றும் ஆப்பிள்களால் மண்டபம் அழகு படுத்தப்பட்டுள்ளது.    TTDயின் SVBC சேனல் மனதிற்கு ஆறுதல் தரும் திருமஞ்சன நிகழ்வின் நேரடி ஒளிபரப்பை வழங்கியது, தங்கள் வீடுகளில் அமர்ந்து திருமஞ்சனத்தைக் கண்ட பக்தர்கள் கோவிந்தனின் அருளை பெற்று புண்ணியம் பெற்றார்கள்.  

4 /6

கோவிந்தனுக்கு திருமஞ்சனம்...நேரில் காண முடியாவிட்டாலும், தொழில்நுட்ப உதவியால் எங்கிருந்தும் பார்க்கும் அருளை கொடுத்திருக்கிறார் ஐயன் திருமலையான்..

5 /6

வெங்கட ரமணா, கோவிந்தா....

6 /6

வெங்கடேசப் பெருமாள், ஏழுமலையில் வீற்றிருக்கும் ஏழுமலையானுக்கு வாசனை திரவியங்கள் கொண்டு திருமஞ்சனம்..