சமீபத்தில் வெளியாகியுள்ள அறிக்கையின்படி 500 மில்லியன் வாட்ஸ்அப் பயனர்களின் டேட்டாக்களை திருடப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொதுவாக வாட்ஸ் அப் சாட் அனைத்தும் எண்டு-டூ-எண்டு என்க்ரிப்ட் செய்யப்பட்டு பாதுகாப்பாக உள்ளது, இருப்பினும் உங்கள் சாட்டில் அந்த அம்சம் செயல்பாட்டில் உள்ளதா என்பதை கவனித்துக்கொள்ளுங்கள்.
டூ-ஸ்டெப்-வெரிஃபிகேஷன் ஆக்டிவேட் செய்து 6 இலக்க பின் நம்பரை போட்டு வாட்ஸ்அப் சாட்டை பாதுக்காப்பாக வைத்துக்கொள்ளலாம். வாட்ஸ்அப் மூலம் தானாகவே இயங்கும் க்ளவுட் பேக்கப்புகளை முடக்கிவிடுவது நல்லது.
தெரியாத எண்ணிலிருந்து அனுப்பப்படும் எந்தவித லிங்குகளையும் திறக்கக்கூடாது. செக்யூரிட்டி நோட்டிஃபிகேஷனை ஆன் செய்வதன் மூலம் உங்களது வாட்ஸ்அப் வேறொரு சாதனத்தில் இயங்குகிறதா என்பதை கண்டறியலாம்.
பயணத்தின்போதோ அல்லது பொதுவெளியிலோ பிறர் உங்களது வாட்ஸ்அப் சாட்டை பார்க்க அனுமதிக்கக்கூடாது.