Tips To Control High BP: உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க 5 வழிகள்

பெரும்பாலான இந்தியர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. இது இதயக் கோளாறுகளுக்கு வழிவகுக்கிறது. இதைத் தவிர்க்க நமது அன்றாட வாழ்க்கையில் சில சின்னச்சின்ன ஆரோக்கியமான  பழக்கங்களைப் பின்பற்றி வந்தாலே போதும். அப்படி இயற்கையாக ரத்த அழுத்தம் குறைக்க, நாம் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைகளைப் பார்ப்போம்.

 

1 /5

காலையில் உடற்பயிற்சி: ரத்தத்தில் சர்க்கரையின் அளவு, உயர் ரத்த அழுத்தம், உடல்பருமன் ஆகியவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தினசரி காலையில் குறைந்தது 15 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். அதுபோல இயற்கையை ரசித்தபடியே 20 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது நல்லது. இதனால்  நமது உடலின் எடை எப்போதும் கட்டுக்குள் இருக்கும். ரத்த அழுத்தமும் சீராக இருக்க உதவும்.

2 /5

லாவெண்டர் எண்ணெய்: லாவெண்டர் எண்ணெய் உயர் ரத்த அழுத்தத்தில் பயன்படுத்த மிகவும் நல்லது என்று கருதப்படுகிறது. மேலும், இது மன அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் இந்த எண்ணெய் தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது.

3 /5

கீரைகள்: இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த கீரைகள்தான் மிகச்சிறந்த சூப்பர் ஃபுட். இதில் உள்ள ஊட்டச்சத்துகள் இதயத்தின் ஆரோக்கியத்தைக் காக்கவும், ரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.

4 /5

ஆளி விதை: ஆளி விதையில் ஒமேகா -3 கொழுப்பு அமிலம் கொண்டுள்ள லினோலினிக் அமிலத்தின் கூட்டு வளமாக இருக்கிறது. பல ஆய்வுகளின் படி, ஆளி விதை சேர்த்த உணவை உட்கொண்டால், உயர் இரத்த அழுத்தம் கொண்டவர்களுக்கு கொலஸ்ட்ரால் குறைந்த அளவிலேயே இருக்கும். மேலும் இரத்த அழுத்தத்தையும் இது குறைக்க உதவும்.

5 /5

சூரியகாந்தி விதைகள்: இந்த விதைகளில் ஒமேகா 6 கொழுப்புகள் அதிகமாக உள்ளன. மேலும் வைட்டமின் ஈ, பி காம்ப்ளெக்ஸ் போன்றவையும் அதிகமாக உள்ளன. ஒரு சில சூரியகாந்தி விதைகளை உண்டால் அது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்.