பேனில் அதிகம் தூசி உள்ளதா? புதியது போல் ஜொலிக்க இந்த முறைகளை பின்பற்றுங்கள்!

Fan Cleaning Tips: வீட்டில் உள்ள தூசிகள் முதலில் மின்விசிறிகளில்தான் படியும். குறிப்பாக சமையலறைக்கு அருகிலுள்ள பேனில் படியும் தூசிகளை சுத்தம் செய்வது கடினம். 

 

1 /7

வீட்டில் உள்ள மின்விசிறிகளை சுத்தம் செய்வது ஒரு பெரிய வேலையாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக சமையலறைக்கு அருகில் உள்ள மின்விசிறிகள் எப்போதும் மிகவும் அழுக்காக இருக்கும். எண்ணெய், தூசி காரணமாக தூசி பதிகம் படிக்கிறது.   

2 /7

இந்த சூழ்நிலையில் ரெக்கையில் ஒட்டியுள்ள தூசியை சுத்தம் செய்ய நாம் பல வழிகளை முயற்சி செய்து வருகிறோம். எளிதாக சுத்தம் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.  

3 /7

டஸ்ட் கிளீனரைக் கொண்டு பேனில் உள்ள தூசியை சுத்தம் செய்யலாம். முதலில் துணியை கொண்டு பேனை நன்கு துடைத்து கொள்ளுங்கள்.  

4 /7

பிறகு பேனில் உள்ள தூசி மற்றும் அழுக்குகளை சுத்தம் செய்ய டஸ்ட் கிளீனரை பயன்படுத்துங்கள். இதன் மூலம் பேன் புதியது போல் இருக்கும்.  

5 /7

பேனை சுத்தம் செய்ய மற்றொரு வழி ஒரு பாத்திரத்தில் சோப்பை வைத்து கொள்ளுங்கள். பிறகு அதில் எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து கலவையை தயார் செய்யவும். இதனை கொண்டு பேனில் உள்ள எண்ணெய் மற்றும் அழுகை எளிதில் சுத்தம் செய்யலாம்.   

6 /7

தூசியை சுத்தம் செய்ய மற்றொரு வழி நன்கு ஈரமான துணியை கொண்டு தேய்த்து சுத்தம் செய்யுங்கள். பின்பு ஈரம் இல்லாத துணியை கொண்டு ஒருமுறை சுத்தம் செய்யுங்கள்.  

7 /7

வாரம் ஒருமுறை அலுப்பு பார்க்காமல் சுத்தம் செய்து வந்தால் அதிக தூசி பேசில்  இருக்காது. இதன் மூலம் எளிமையாக சுத்தம் செய்ய முடியும்.