Name Astrology: உங்கள் மனைவியின் பெயர் இந்த எழுத்தில் தொடங்கினால் நீங்கள் அதிர்ஷ்டசாலி

Astrology: ஜோதிடத்தின் மூலம், ஒரு மனிதரின் இயல்பு, ஆளுமை, கடந்த காலம், எதிர்காலம் தொடர்பான அனைத்தையும் அறிந்துவிடலாம். பலர் இவற்றைப் பற்றி தெரிந்துகொள்ள ஜோதிட நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கிறார்கள். ஆனால், சில வழிமுறைகளின் மூலம், நிபுணத்துவம் இல்லாத சாதாரணமானவர்களும் மற்றவர்களைப் பற்றிய சில சிறப்புகளை அறிந்து கொள்ள முடியும்.

காதல், அன்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் விஷயத்தில் எந்த பெண்கள் சிறந்தவர்களாக இருப்பார்கள், அதாவது யார் மிகச்சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பார்கள் என்பதை தெரிந்துகொள்ளும் ஒரு வழியை இந்த பதிவில் காணலாம். இதற்கு பெண்களின் பெயரின் முதல் எழுத்தை மட்டும் தெரிந்துகொண்டால் போதும்.

1 /5

A என்ற எழுத்தில் தொடங்கும் பெண்கள், பெரும்பாலும் வாழ்க்கையில் ஏற்படும் முதல்  காதலை உண்மையான காதலாகக் கொண்டு, அந்த காதலனையே தங்கள் துணைவனாக்கி, வாழ்க்கை முழுவதும் அவருடனே இருப்பவர்கள். அவர்கள் தங்கள் துணைவரை மிகவும் நேசிப்பது மட்டுமல்லாமல், அவர் மீது அதிக அக்கறையும் காட்டுகிறாள்.

2 /5

G என்ற எழுத்தில் பெயர் தொடங்கும் பெண்கள், அவர்களும் நல்ல வாழ்க்கைத் துணையாக இருப்பதோடு, அவர்களுக்கும் நல்ல துணை கிடைக்கும். மொத்தத்தில், இந்த பெண்கள் காதல் விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்.  

3 /5

I என்ற எழுத்தில் தொடங்கும் பெண்கள், தங்கள் வாழ்க்கைத் துணையை மிகவும் நேசிப்பதோடு, அவருக்கு மிகவும் நேர்மையாக இருப்பார்கள். இவர்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு அதிக அளவில் ஆதரவு அளிப்பார்கள். இந்தப் பெண்களின் துணைவராக இருப்பது வாழ்க்கையில் பல வெற்றிகளை காண்பது நிச்சயம். இந்த வெற்றியில் இந்த பெண்களின் பங்களிப்பும் அதிகம் இருக்கும்.

4 /5

N என்ற எழுத்தில் தொடங்கும் பெண்களும் காதல் விஷயத்தில் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். சில சமயங்களில் அவர்கள் மிக இளம் வயதிலேயே காதலில் விழுந்து, அவருடன் வாழ்நாள் முழுவதையும் கழிப்பார்கள். இந்த பெண்களுக்கு தங்கள் துணையை மகிழ்ச்சியாக வைத்திருக்க நன்றாக தெரியும்.

5 /5

S இல் தொடங்கும் பெண்கள் எப்போதும் வாழ்க்கையில் உண்மையான அன்பைத் தேடுகிறார்கள், இதற்காக அவர்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியும் இருக்கும். இந்த பெண்கள் தங்கள் துணையை மிகவும் நேசிப்பவர்களாக, ஆதரவு அளிப்பவர்களாக இருப்பார்கள். (பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான தகவல்கள் ஆகும். இவை யாவும் அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. ஜீ நியூஸ் அதை உறுதிப்படுத்தவில்லை.)