Electric Cars: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 5 எலெக்ட்ரிக் கார்கள்

கவர்ச்சிகரமான தோற்றம் மற்றும் சிறந்த ஆற்றல் வரம்பைக் கொண்ட எலெக்ட்ரிக் காரை நீங்கள் தேடுகிறீர்களானால், உள்நாட்டு சந்தையில் கிடைக்கும் இந்த விருப்பங்களை நீங்கள் பரிசீலிக்கலாம்.

 

1 /5

டாடா மோட்டார்ஸ், சமீபத்தில் நாட்டின் மலிவான எலெக்ட்ரிக் காரான டாடா டியாகோவை அறிமுகப்படுத்தியது. இந்த காரின் விலை ரூ.8.49 லட்சம் முதல் ரூ.11.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.

2 /5

டாடா டைகோர் என்பது டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எலக்ட்ரிக் செடான் கார் ஆகும். 26 kWh லித்தியம் அயன் பேட்டரி கொண்ட இந்த காரின் விலை ரூ.12.24 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்).

3 /5

டாடாவின் மூன்றாவது எலெக்ட்ரிக் காரான டாடா நெக்ஸானின் எலெக்ட்ரிக் பதிப்பிற்கு நல்ல கிராக்கி உள்ளது. இந்த காரின் விலை ரூ.14.99 லட்சத்தில் (எக்ஸ்-ஷோரூம்) தொடங்குகிறது.

4 /5

ஹூண்டாய் நிறுவனத்தின் 392 kWh லித்தியம் அயன் நிரம்பிய எலெக்ட்ரிக் கார் ஹூண்டாய் கோனாவும் சிறந்த தேர்வாகும். இந்த கார் ரூ.23.84 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

5 /5

BYD எலெக்ட்ரிக் கார் BYD eSix 717 kWh பேட்டரி பேக்குடன் கிடைக்கிறது. நிறுவனம் இந்த காரை ரூ.29.15 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்கிறது.