மற்ற எல்லா உறவுகளை விடவும் நட்பு தான் ஒரு அற்புதமான உறவு, அப்படிப்பட்ட உறவில் நாம் செய்யக்கூடிய சில தவறுகள் நட்புறவில் விரிசலை ஏற்படுத்திவிடும்.
உங்கள் நண்பரை பற்றிய விஷயங்களை அவர்களின் அனுமதி இல்லாமல் மற்றவர்களிடத்தில் பேசாதீர்கள், ஒருவரை பற்றி புறம் பேசுவது இழிவான செயல் மற்றும் உங்களது நல்ல நட்பும் கெட்டுப்போகும்.
உங்களை நம்பி உங்கள் நண்பர் சொன்ன விஷயங்களை மற்றவர்களிடம் சொல்வது அல்லது உங்கள் நண்பருக்கு நம்பிக்கை துரோகம் செய்வது போன்றவை உங்களது நட்புறவை சீர்குலைத்துவிடும்.
உங்கள் நண்பரின் உணர்வுகள், நம்பிக்கைகள் அல்லது கருத்துக்களை அவமதித்தால் அது உங்கள் இருவருக்கும் இடையேயான நட்பில் விரிசலை ஏற்படுத்தும்.
உங்கள் நண்பரின் சாதனையை பாராட்டுங்கள், மாறாக நீங்கள் அவர்களின் வளர்ச்சியை கண்டு பொறாமைப்பட்டால் அது உங்கள் இருவரிடையே வெறுப்பு மற்றும் போட்டியை ஏற்படுத்தும்.
உங்கள் நண்பரிடம் நீங்கள் பொய் சொன்னாலோ அல்லது ஏதேனும் ஒரு முக்கியமான விஷயத்தை மறைத்தாலோ அது உங்கள் மீதான நம்பிக்கையை இழக்க செய்யும்.