இந்த 5 பச்சை ஜூஸ் நீரிழிவு நோயாளிகளுக்கு அருமருந்து

Green Juice To Control Blood Sugar: இன்று நாம் சில பச்சை நிற ஜூஸூகளைப் பற்றி காணப் போகிறோம், இதை குடிப்பதன் மூலம் எகிறும் இரத்த சர்க்கரை அளவை விரைவாக குறைக்கலாம்.

Green Juice For Diabetes: தவறான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறை நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும். அத்தகைய சூழ்நிலையில், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாடில் இருக்க சில பச்சை சாறுகளை உட்கொண்டால் போதும்.

1 /6

கற்றாழையில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளதால், நீரிழிவு நோயாளிகள் இந்த சாற்றை பருகினால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தலாம். 

2 /6

பாகற்காய் சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும். பாகற்காய் சாற்றில் பாலிபெப்டைட்-பி உள்ளது, இது இன்சுலின் பொருளாகும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ளலாம்.

3 /6

சுரைக்காய் சாற்றில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளது, இந்த ஜூஸை குடிப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

4 /6

கீரை சாறு நீரிழிவு நோய்க்கு மிகவும் நல்லது. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்துள்ளதால், ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.

5 /6

முருங்கை சாறு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. இதில் பல வைட்டமின்கள், தாதுக்கள் உள்ளதால், இது குளுக்கோஸ் அளவை சமநிலை படுத்த உதவுகிறது. இதில் உள்ள சத்துக்கள் உடலில் இன்சுலின் அளவை அதிகரிக்க உதவுகிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

6 /6

இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.