இளைஞரின் உயிரை மீட்ட பெண் காவல் ஆய்வாளர் - குவியும் பாராட்டு!

மயங்கி கிடந்த நபரை தன் தோளில் சுமந்து சென்று மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி!

தெற்கு வங்கக்கடல் மத்தியில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. 

1 /7

உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று இளைஞரை மருத்துவமனைக்கு அனுப்பி அவரின் உயிரை மீட்ட பெண் காவல் ஆய்வாளருக்கு பாராட்டு குவிகிறது. 

2 /7

மயங்கி கிடந்த அந்த நபரை பார்த்ததும் பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி உடனடியாக அவரை தன் தோளில் சுமந்து தூக்கி சென்ற சம்பவத்தை பார்த்தவர்கள் பாராட்டி வருகின்றனர்.

3 /7

காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி ஏற்கனவே கோராணா கால கட்டத்தில் உதவிகள் புரிந்ததற்காக மேலதிகாரிகளால் பாராட்டு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

4 /7

ஆய்வாளர் ராஜேஸ்வரி தோளில் சுமந்து வந்து ஆட்டோவில் ஏற்றி அனுப்பிய புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 

5 /7

மீட்கப்பட்ட நபரின் பெயர் உதயகுமார் மற்றும் அவர் கல்லறைத் தோட்டத்தில் வேலை செய்கிறார். 

6 /7

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழையால் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். 

7 /7

மரம் ஒடிந்து விழுந்ததில் மயங்கிய நிலையில் இருந்தவரை இறந்து விட்டார் என நினைத்து காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.