ரசிகர்களுக்கு ஷாக்! விஜய் இனி கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா?

Vijay Movies: நடிகர் விஜய், அரசியலுக்கு வரவுள்ளதை தொடர்ந்து அவர் கடைசி படத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிக்கப்போவதில்லை என்று தெரிவித்துள்ளார். இந்த நிலையில், அவர் இனி தான் நடிக்கும் படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

1 /7

விஜய், முழு நேர அரசியலில் இறங்க உள்ளார். இதையடுத்து, தான் கமிட் ஆகியிருக்கும் படங்களை முடித்து கொடுத்துவிட்டு மக்கள் பணியில் ஈடுபட உள்ளதாக கூறியிருக்கிறார். இவர், லோகேஷ் கனகராஜ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இடம் பெற்றிருந்த லியோ படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். 

2 /7

லியோ படம், கடந்த ஆண்டு வெளியானது.  இப்படத்திற்கு இரண்டாம் பாகம் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் விஜய் அரசியலுக்குள் வருவேன் என கூறிவிட்டதால் அந்த படத்திற்கான வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. 

3 /7

விஜய், ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ளார். இதையடுத்து 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார். 

4 /7

லியோ படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் நடிக்கப்போவதில்லை என்று தெரிந்த பிறகு, இவர் எல்.சி.யு படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 

5 /7

விஜய், தற்போது தனது 68வது படமான GOAT படத்தில் நடித்து வருகிறார். இந்த படம், வரும் ஜூலை மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. 

6 /7

லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் இன்னும் கைதி 2, விக்ரம் 2, ரோலக்ஸ் உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது. 

7 /7

லியோ படத்தின் தொடர்ச்சி, எல்.சி.யு படங்களில் இருக்கும் என்ற காரணத்தால் இவர் விக்ரம் 2, கைதி 2, ரோலக்ஸ் உள்ளிட்ட படங்களில் கெஸ்ட் ரோலில் நடிக்கலாம் என கூறப்படுகிறது. இவை அனைத்தும் சினிமா ரசிகர்களின் கணிப்புதானே தவிர, இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.