50 செகண்ட் டீசரில் இவ்வளவு விஷயங்கள் இருக்கா? GOAT படத்தின் அப்டேட்!

Actor Vijay: தளபதி விஜய்யின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு GOAT படக்குழு விஜய் ரசிகர்களுக்காக ஸ்பெஷல் டீசரை தற்போது வெளியிட்டுள்ளது.

 

1 /6

நடிகர் விஜய் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. மேலும் தமிழக வெற்றி கழகம் சார்பாக எந்த ஒரு விழாவும் நடைபெற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.  

2 /6

இந்நிலையில் தற்போது விஜய் நடித்து வரும் G.O.A.T படம் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று விஜய் பிறந்தநாளிற்காக டீசர் ஒன்றி வெளியிட்டுள்ளார்.   

3 /6

இந்த டீஸரில் அப்பா மற்றும் மகன் விஜய் இருவரும் வெளிநாட்டில் பைக்கில் ஸ்டண்ட் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஹாலிவுட் தரத்தில் படம் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.  

4 /6

"பார்க்காததைக் காணும் நேரம் இது" என்ற வார்த்தைகளுடன் டீஸர் தொடங்குகிறது. GOAT படத்தின் செகண்ட் லுக்காக வந்து இருந்த போஸ்டர் சம்பத்தப்பட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளது.  

5 /6

விஜய் அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு குறைந்த அளவில் தான் இருந்தது. தற்போது இந்த 50 sec டீசர் மீண்டும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.   

6 /6

GOAT படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் அமீர், வைபவ், மீனாட்சி சவுத்ரி, சினேகா, மோகன், லைலா மற்றும் ஜெயராம் ஆகியோருடன் நடிக்கின்றனர். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.