உடல் பருமன் குறைய... சுவையான சில பாசி பருப்பு ரெஸிபிகள்!

உடல் பருமன் பொதுவான பிரச்சனையாக் ஆகி விட்ட நிலையில், வீட்டிலேயே தயாரிக்கப்படும் எளிய உணவை உட்கொள்வதன் மூலம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.

எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க, பாசிப்பருப்பை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இதில் உள்ள குறைந்த கலோரி எடையைக் கட்டுப்படுத்தும். பசியைக் கட்டுப்படுத்தும் நார்ச்சத்தும் இதில் போதுமான அளவில் உள்ளது. இதை உட்கொள்வதன் மூலம், நீங்கள் மீண்டும் மீண்டும் பசியை உணர மாட்டீர்கள், இதன் விளைவாக எடையைக் குறைப்பதில் உதவி கிடைக்கும்.  

1 /6

பிற பருப்புகளைப் போல, பயத்தம் பருப்பு, அதாவது பாசிப்பருப்பும் நம் ஆரோக்கியத்திற்கு பல வித நன்மைகளை செய்கின்றது. இதனால் நமது உடலுக்கு ஊட்டம் கிடைக்கிறது. புரோட்டீன், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின்-பி6, நியாசின், ஃபோலேட் ஆகியவை பயத்தம் பருப்பில் காணப்படுகின்றன. பாசிப்பருப்பை உணவில் சேர்ப்பதன் மூலம், பருமனை குறைக்கலாம். அதற்கான சில சுவையான வழிகளை அறிந்து கொள்ளலாம். 

2 /6

பாசி பருப்பு தோசை: உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவாக பாசிபருப்பு தோசையை தயாரிக்க, பாசி பருப்பை தண்ணீரில் ஊறவைத்து, பின்னர் அரைக்கவும். பின்னர் நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய், பச்சை கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து தோசையாக சாப்பிடலாம்.  

3 /6

பாசிபருப்பு சூப்: அதிகரித்து வரும் உங்கள் எடையை குறைக்க விரும்பினால், நீங்கள் பருப்பு சூப்பை உட்கொள்ளலாம். சுவையாக இருப்பதைத் தவிர, தயாரிக்க மிகவும் எளிதானது. இதற்கு பூண்டு, இஞ்சி, சீரகம், மசாலா, பெருங்காயம், உப்பு சேர்த்து ஊறவைத்த பாசிப்பருப்பை சேர்த்து கொதிக்கவிடவும். பின் ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் பொடித்த மிளகை சேர்த்து உட்கொள்ளவும். இதனை தொடர்ந்து உட்கொள்வது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும்.

4 /6

உடல் எடையை குறைக்க பாசி பருப்பு இட்லி தயார் செய்து சாப்பிடலாம். இதற்கு ஊறவைத்த பாசி பருப்பையும் உளுத்தம் பருப்பையும் சேர்த்து அரைக்க வேண்டும். அதனை நான்கு மணி நேரம் கழித்து தயாரிக்கும் போது சிறிது புளித்திருக்கும். பிறகு உங்களுக்கு விருப்பமான காய்கறிகள், மசாலா மற்றும் உப்பு சேர்க்கவும். இப்போது இந்த மாவிலிருந்து இட்லி தயார் செய்யவும். காலை உணவாக பாசி பருப்பு இட்லி சாப்பிடலாம்.  இது எடையைக் குறைக்க உதவும். 

5 /6

முளை கட்டிய பாசி பயறை உட்கொள்வது எடை இழப்புக்கு மிகவும் நன்மை பயக்கும். காலையில் வெறும் வயிற்றில் இதை உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்துவதோடு எடையைக் குறைக்கவும் உதவும். இதற்கு, முளை கட்டிய பயரை சிறிது வேக வைத்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, வெள்ளரி, பச்சை மிளகாய், எலுமிச்சை சாறு மற்றும் உப்பு சேர்த்து கலக்கவும். இது ஒரு சுவையான மற்றும் புரதச்சத்து நிறைந்த காலை உணவு தயார்.

6 /6

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.