மோடியின் அமைச்சரவையில் இடம்பெறும் அண்ணாமலை? இன்று பதவியேற்கிறார்?

பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரதமராக பதவியேற்க உள்ளார். மோடியின் அமைச்சரவையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இணை அமைச்சராக பதவியேற்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

 

1 /6

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று மத்திய அமைச்சர்கள் குழுவில் இணை அமைச்சராக பதவியேற்க உள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.   

2 /6

தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதமராக தேர்தெடுக்கப்பட்டுள்ள நரேந்திர மோடி இன்று மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளார்.  

3 /6

அதனை தொடர்ந்து பாஜகவில் உள்ள சிலரும், கூட்டணி கட்சிகளில் உள்ள சிலரும் மத்திய அமைச்சராக பதவியேற்க உள்ளதாக கூறப்படுகிறது.   

4 /6

இதில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலைக்கு இணை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளது.   

5 /6

அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டால் தமிழக பாஜக தலைவர் பதவி வேறு ஒருவருக்கு வழங்கப்படும். அண்ணாமலையை தொடர்ந்து தமிழிசைக்கு அமைச்சர் பதவி வழங்க வாய்ப்புள்ளது.  

6 /6

2019ல் பாஜகவில் இணைந்த அண்ணாமலை 2024 மக்களவைத் தேர்தலில் கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்டு திமுகவிடம் தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.