சென்னை செண்ட்ரல் டெப்போவில் நடைபெற்ற வெளியீட்டு விழாவில் துறை சார்ந்த அதிகாரிகள் பலரும் ஸ்மார்ட் கார்டு அறிமுகம் விழாவில் பங்கேற்றனர். எம்டிசி பெருநகரப் போக்குவரத்துக் கழகம்( எம்டிசி) பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து பொதுமக்களுக்காக 50,000 ஸ்மார்ட் கார்டுகளை இலவசமாக விநியோகம் செய்யவுள்ளது.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் இன்று சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டை தொடங்கி வைத்தார். பொதுமக்கள் அன்றாட பயன்படுத்தும் பேருந்துகள், ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் சேவைகள் மக்களிடையே அதிகரித்துவிட்டது. இந்தநிலையில் பொதுமக்களின் சேவைகளின் வசதியை புரிந்துகொண்டு மக்களுக்காக இந்த சேவையைத் தமிழ்நாடு அரசு எளிமையாக்கியது.
எம்டிசி நிர்வாக இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் இதுபற்றி கூறுகையில் ஸ்மார்ட் கார்டை மின்னனு டிக்கெட் இயந்திரங்கள் மூலம் 98.5 சதவீதம் டிக்கெட்டுகள் பொதுமக்களுக்கு வழங்கிவருகிறது.
அதுமட்டுமல்லாமல் பேருந்தில் பயணம் செய்யும் பயனர்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் தேவையற்ற சண்டைகள் டிக்கெட் வாங்கும்போது ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது.இதனால் போக்குவரத்து கழக ஊழியர்கள் குறைகள் மற்றும் நாள்தோறும் பயணம் செய்யும் பயனர்கள் குறைகள் முறையாக கேட்டறிந்து இத்திட்டம் அறிமுகம் செய்ததாக விழாவில் கலந்துக்கொண்ட அதிகாரிகள் கூறினர்.
சிங்கார சென்னை ஸ்மார்ட் கார்டின் சிறப்பம்சம் என்னவென்றால் பொதுமக்கள் தங்களின் ஸ்மார்ட் கார்ட்டை வைத்து மாநகர போக்குவரத்து, மின்சார ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட அனைத்திலும் பயன்படுத்தலாம்.
ஸ்மார்ட் கார்டு வைத்து பொதுமக்கள் ப்ரீபெய்ட் கார்டை தங்களின் நகரம் முழுவதும் உள்ள எம்டிசி கவுண்டர்கள் அல்லது ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்து பயன்படுத்தலாம்.
போக்குவரத்து ஊழியர்களுக்கு பயிற்சி: இந்த ஸ்மார்ட் கார்டு குறித்து போக்குவரத்து ஊழியர்களுக்கு முழு பயிற்சி அளிக்கப்படும் என்று எம்டிசி நிர்வாக இயக்குனர் கூறினார்.
ஸ்மார்ட் கார்டு நேஷனல் காமன் மொபிலிட்டி அட்டையாகப் போக்குவரத்துத் துறையினர் பொதுமக்களுக்கு வசதியை ஏற்படுத்தி போக்குவரத்து பயணத்தை எளிமையாக்கினர். இந்த நேஷனல் காமன் மொபிலிட்டி கார்டை தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் பொதுமக்களுக்காக 2025 ஜனவரி 6 திங்கட்கிழமை இன்று அறிமுகப்படுத்தினார்.
பொதுமக்கள் இனி சென்னையில் எந்தவொரு கஷ்டமும் இல்லாமல் ரயில், பேருந்து மற்றும் மெட்ரோ உள்ளிட்ட அனைத்திலும் பயன்படுத்தலாம். ஸ்மார்ட் கார்டு பயன்பாடு மெட்ரோ சேவையில் மட்டுமே இருந்துவந்தது. இந்த கார்டு வசதி பொதுமக்களுக்கு மிகவும் வசதியாக இருந்ததாகப் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்டு கணக்கீடு செய்தனர்.
இதன்பின், இந்த திட்டத்தை விரிவாக்கப் போக்குவரத்துத் துறையின் அதிகாரிகள் கலந்து ஆலோசனை செய்து இந்த முடிவை பொதுமக்களுக்காக அறிமுகம் செய்தனர். பேருந்தில் பயணம் செய்யும் பயனாளர்கள் சரியான சில்லறையைக் கொடுத்து டிக்கெட்டு வாங்குவதில்லை என்று புகார்கள் எழுந்ததாகக் கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் பேருந்தில் பயணம் செய்யும் பயனர்களுக்கும் போக்குவரத்து ஊழியர்களுக்கும் தேவையற்ற சண்டைகள் டிக்கெட் வாங்கும்போது ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளது.இதனால் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் குறைகள் மற்றும் நாள்தோறும் பயணம் செய்யும் பயனர்கள் குறைகள் முறையாகக் கேட்டறிந்து இத்திட்டம் அறிமுகம் செய்ததாக விழாவில் கலந்துகொண்ட அதிகாரிகள் கூறினர்.