OTT Release: பிப்ரவரி மாதம் ஓடிடி-யில் வெளியாகும் படங்கள், பட்டியல் இதோ

OTT Releases of Tamil Movies in February 2023: 2023 ஆம் புத்தாண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அமோகமாக பிறந்தது. பொங்கல் ரிலீசாக வெளிவந்த விஜயின் வாரிசு படமும், அஜித்தின் துணிவு படமும் பாக்ஸ் ஆபிசில் பட்டையை கிளப்பியதோடு, ரசிகர்களையும் மகிழ்வித்தன. இவை இரண்டும் மிக விரைவில் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன.

இந்த ஆண்டு இன்னும் பல படங்கள் மற்றும் ஓடிடி ரிலீஸ்களுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். அந்த வகையில் பிப்ரவரி மாதம் ஓடிடி-யில் ரிலீசாக உள்ள தமிழ் படங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 

1 /5

பிளாக் பேந்தர்: வகண்டா ஃபாரெவர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் பிப்ரவரி 1 ஆம் தேதி வெளியானது. மன்னன் டி'சல்லாவின் மரணத்தை அடுத்து, உலக வல்லரசுகளின் தலையீட்டிலிருந்து தங்கள் இருப்பிடத்தைக் காக்க வக்கண்டான்களின் போராட்டம்தான் படத்தின் கதையாக உள்ளது. 

2 /5

கோவை சரளா நடிப்பில் அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள செம்பி படம் இன்று டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. 10 வயதான செம்பி மற்றும் அவரது பாட்டி வீரத்தாயியின் வாழ்க்கையை காட்டும் படமாக இது எடுக்கப்பட்டுள்ளது.

3 /5

அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஓடிடி தளமான நெட்பிளிக்சில் இப்படம் வரும் 8-ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

4 /5

விஜயின் சூப்பர் ஹிட் படமான வாரிசு ஓடிடி தளங்களில் இம்மாதம் 22 ஆம்  தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னர் வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்களும் பிப்ரவரி 10 ஆம் தேதி ஓடிடி-யில் வெளியாகும் என கூறப்பட்டது.

5 /5

ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள ஃபர்ஸி வெப் சீரிஸ் பிப்ரவரி 10 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகிறது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.