T.Natarajan: சின்னப்பம்பட்டியில் இருந்து சிட்னிக்கு பயணம் in pics

தமிழக வீரர் தங்கராசு நடராசன் சின்னப்பம்பட்டியில் இருந்து சிட்னிக்கு சென்று இந்தியாவுக்காக கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறார். சின்னப்பம்பட்டி முதல் சிட்னி வரையிலான வெற்றிப் பயணத்தில், சிட்னியில் எடுத்த புகைப்படங்களை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் சில தொகுப்பாக...

சிட்னியில் சோனி தொலைக்காட்சியில் நிகழ்ச்சியின் தகவல்களை வழங்கிய முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்தி, நடராஜனை அழைத்து அவருடன் தமிழில் பேசினார். 

சர்வதேச போட்டியில் கலந்து கொள்ளும்போது அவருடைய எதிர்பார்ப்பு என்ன என்ற கேள்விக்கு, "நான் எதுவும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. எனக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்ய வேண்டும் என்று நினைத்தேன். சில வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக எனக்கு வாய்ப்பு கிடைத்தது. அதை பயன்படுத்திக் கொள்ள நினைத்தேன். நான் நெட் பெளலராகவே வந்தேன். என்னுடைய ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். ஐபிஎல் தொடரில் நல்ல ஃபார்மில் இருந்தேன். அது எனக்கு உதவியாக இருந்தது. சக வீரர்கள் எனக்கு மிகப்பெரிய அளவில் ஆதரவாக இருந்தனர். என்னை எல்லோரும் ஊக்குவித்தனர். அது எனக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையை கொடுத்தது" என்றார் நடராஜன்.

"சின்ன வயதில் இருந்து விக்கெட் எடுத்தால் கத்தும் வழக்கம் எனக்கு இல்லை, மிக ஆக்ரோஷமாக கத்துவது எனக்கு வராது. ஆரம்பத்தில் இருந்தே நான் அப்படித்தான் என்று கூறுகிறார் நடராஜன்.

Also Read | cricketer நடராஜனின் அம்மா; சின்னப்பம்பட்டி உழைக்கும் கரங்கள்

Photos Courtesy: Twitter/@Natarajan_91

1 /6

சிட்னியில் சின்னப்பம்பட்டி தங்கராசு நடராஜன். இன்றைய இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழும் தங்கமான இளைஞர்.

2 /6

சிட்னி மைதானத்தில் பெற்ற வெற்றிக்குப் பிறகு சிட்னி நகரில் நடராஜ உலா..

3 /6

சிட்னியில் நடைபெற்ற டி20 போட்டித் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி, டி20 தொடருக்கான கோப்பையை நடராஜனிடம் வழங்கி அவரை பெருமைப்படுத்தினார்.

4 /6

சிட்னியில் நடைபெற்ற டி20 போட்டித் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் வென்றி பெற்றது.  தொடரின் சிறப்பு ஆட்ட நாயகனுக்கான விருது ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டது. அதை பெற்றுக் கொண்ட ஹர்திக், அந்த விருதுக்கு தகுதியானவர் தமிழக வீரர் நடராஜன் என்று கூறி கோப்பையை அவரிடம் வழங்கினார். 

5 /6

சிட்னியில் சோனி தொலைக்காட்சியில் நிகழ்ச்சியின் தகவல்களை வழங்கிய முன்னாள் இந்திய வீரர் முரளி கார்த்தி, நடராஜனை அழைத்து அவருடன் தமிழில் பேசினார். "ஆஸ்திரேலியா வந்து இங்கு மிகப்பெரிய அணியுடன் ஆடி முதல் தொடரிலேயே இப்படி வெற்றி பெறுவது பெரிய மகிழ்ச்சி அளிக்கிறது. இதை பற்றி சொல்வதற்கே வார்த்தை இல்லை. ரொம்ப சந்தோசமா இருக்கேன்" என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

6 /6

"எனது யார்க்கர் மீது நம்பிக்கை இருக்கிறது. எப்படி பெளலிங் செய்ய வேண்டும் என்பதை  விக்கெட்டுக்கு ஏற்றாற்போல முடிவு செய்வோம். அதற்கு கேப்டன் ஆலோசனை சொல்வார். கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர் சொல்வது போல செயல்பட்டேன். முழு ஈடுபாட்டுடன் செயல்பட்டேன். ஐபிஎல் தொடரில் எப்படி ஆடினேனோ அதுபோலவே இங்கேயும் ஆடினேன்" என்று சிட்னி அனுபவத்தைப் பற்றி கூறுகிறார் நடராஜன்.