ஆடி மாதத்தில் சிம்மத்திற்கு பெயர்ச்சியாகும் சுக்கிரன்! லக்ஷ்மி நாராயண யோகம் ஜாக்பாட்!

Sukran Peyarchi July 31 : நேரம் நன்றாக இருந்தால் அதிர்ஷ்டம் கூரையை பொத்துக் கொண்டு வரும் என்று சொல்வார்கள். அதேபோல, இன்னும் இரு நாட்களில் அதாவது ஜூலை 31ம் தேதியன்று சிம்ம ராசிக்குப் பெயரும் சுக்கிரன் 4 ராசிகளுக்கு அபரிமிதமான நலன்களைக் கொடுப்பார்

அதிர்ஷ்டம் தரப்போகும் சிம்ம ராசியில் சுக்கிரனின் பெயர்ச்சி! சுக்கிரனின் சஞ்சார மாற்றத்தின் பலன்களால் செல்வாக்கு அதிகரிக்கவிருக்கும் இந்த ராசிகளில் உங்கள் ராசியும் இருக்கிறதா?  

1 /8

பெயர் புகழ் மற்றும் பிரபலத்துக்கு காரணமான சுக்கிர பகவான் இந்த ஜூலை மாதத்தில் இரு முறை பெயர்ச்சியாகிறார். தற்போது கடகத்தில் இருக்கும் சுக்கிரன் இன்னும் இரு தினங்களில் சஞ்சாரத்தை மாற்றுகிறார்

2 /8

ஜூலை மாதத்தில் சுக்கிரன் இரண்டு முறை தனது சஞ்சாரத்தை மாற்றுகிறார். கடந்த 7 ஆம் தேதி கடக ராசிக்கு மாறிய சுக்கிரன், கடகத்தில் இருந்து சிம்மத்திற்கு 31 ஜூலை 2024 அன்று மீண்டும் பெயர்ச்சியாகிறார்

3 /8

சுக்கிரனின் இரண்டாவது பெயர்ச்சியால் லக்ஷ்மி நாராயண யோகம் ஏற்படுகிறது. இது சில ராசிகளுக்கு அருமையானதாக இருக்கும்

4 /8

பணவரவை அதிகரிக்கும் சுக்கிரன், தொழில், வியாபாரத்தையும் சிறப்பாக மாற்றுவார். எதிர்பாராத பண வரவு ஏற்படும், குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும்! இதெல்லாம் யாருக்கு வாய்க்கும்? தெரிந்துக் கொள்வோம்.

5 /8

எதிர்பாராத பணவரவால் மகிழ்ச்சியடையப்போகும் ராசிகளில் ரிஷப ராசிக்காரர்கள் முதலிடத்தில் இருப்பார்கள். எதிர்பாராத வெற்றி, முன்னேற்றத்திற்கான பொன்னான வாய்ப்பு என மகிழ்ச்சி கூடும் காலம் இது

6 /8

சுக்கிரனின் ராசி மாற்றம் அனைத்து ராசிகளுக்கும் வெவ்வேறுவிதமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்றால் துலா ராசிக்காரர்களின் வாழ்க்கையில் குதூகலம் கொப்பளிக்கும், ஆசைப்பட்ட விஷயங்களை சுக்கிரன் நிறைவேற்றித் தருவார்

7 /8

சுக்கிர பகவானின் அருளாசி, சிம்ம் ராசிக்காரர்களுக்கு எப்போதும் உண்டு என்றாலும், ஆடி மாதத்தில் சிம்மத்தில் சஞ்சரிக்கும் சுக்கிரன் அழியாத செல்வத்தைத் தந்து மனதில் மகிழ்ச்சியை அதிகரிப்பார்

8 /8

மேஷத்திற்கு, ஜூலை 31 சுக்கிரப் பெயர்ச்சி அற்புதமான பலன்களைக் கொடுக்கும். இதுவரை இல்லாத பல மாற்றங்கள் நடைபெறும். பிறருக்கு பணம் கொடுத்து வராதோ என்ற கவலையுடன் இருந்தவர்கள், இனிமேல் அந்தக் கவலைகள் இல்லாமல் ஜாலியாக இருக்கலாம்