Strength Building Foods: வைட்டமின் பி 12 நிறைந்த உணவுகள் மூலம் உங்கள் ஆரோக்கியத்தையும் உடல் வலிமையையும் அதிகரிக்கவும்
வைட்டமின் பி 12 உடல் மற்றும் உறுப்புகளின் இயல்பான செயல்பாட்டை உறுதி செய்ய மிகவும் அவசியமான வைட்டமின்களில் ஒன்றாகும்.
மேலும் படிக்க | அளவுக்கு மிஞ்சினால் வைட்டமின் பி கேன்சரை உருவாக்கும்
நரம்புகளைப் பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. ஆரோக்கியமான நரம்பு மண்டலத்தை உறுதி செய்து உடலில் இரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவும் உணவுகள் இவை..
புரதத்தின் மிகவும் வளமான ஆதாரமான மாட்டிறைச்சியில் வைட்டமின் பி 12 இல் நிறைந்துள்ளது. செல் ஆரோக்கியம் மற்றும் தசை வளர்ச்சிக்கு தேவையான உணவுப் பொருளான இது, துத்தநாகம், செலினியம், இரும்பு மற்றும் பிற வைட்டமின் பி போன்ற தாதுக்களையும் கொண்டுள்ளது. இந்த அனைத்து தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் அடங்கிய உணவு, நாள் முழுவதும் அதிக ஆற்றலைப் பெறுவதை உறுதி செய்யும்.
தூள் வடிவில் கிடைக்கும், ஊட்டச்சத்து ஈஸ்ட் பெரும்பாலும் வைட்டமின் பி 12 செறிவூட்டப்பட்டதாக இருக்கிறது பி 12 இன் சிறந்த ஆதாரமாக அமைகிறது, சைவ உணவு அல்லது பிற தாவர அடிப்படையிலான உணவைப் பின்பற்றுபவர்களுக்கு விலங்கு அல்லாத ஆதாரங்கள் தேவைப்படுகின்றன, அதற்கு ஊட்டச்சத்து ஈஸ்ட் நல்லது.
சால்மன் மீனில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளது. கொழுப்பு அமிலங்கள் இதய ஆரோக்கியம், மூளை ஆரோக்கியத்திற்கு நல்லது.
விலங்குகளின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்ற உறுப்பு இறைச்சிகளை சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்காது ஆனால் அவை மிகவும் சத்தானவை. அவற்றில் ஏராளமான வைட்டமின் பி 12 உள்ளது, இது உங்கள் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும்.
ஒரு கப் பாலில் 1.1 mcg வைட்டமின் B12 உள்ளது. பால் உணவுகளில் வைட்டமின்கள் நிறைந்துள்ளன, குறிப்பாக பி12 வைட்டமின் அதிகம் உள்ளது.