பிரிட்டிஷ் சாகச மற்றும் தொலைக்காட்சி ஆளுமை பியர் கிரில்ஸ் தனது சாகச நிகழ்ச்சிகளில் பல பிரபலங்களை சந்தித்து நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, நடிகர் அக்ஷய் குமார், ஹாலிவுட் நடிகை கேட் ஹட்சன் ஆகியோர் கிரில்ஸுடன் அவரது துணிச்சலான சாகச நடவடிக்கைகளில் இணைந்துள்ளனர். அவரது நிகழ்ச்சிகள் வித்தியாசமான நிலைமைகளில் உயிர்வாழ்வதை ஆராயும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் சாகச பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
'மேன் Vs வைல்ட்' படத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பியர் கிரில்ஸ்
பிரிட்டிஷ் சாகசக்காரரும் தொலைக்காட்சி தொகுப்பாளருமான பியர் கிரில்ஸ் பிரபல தொலைகாட்சி தொகுப்பாளர். வனப்பகுதிகளில் உயிர்வாழ்வதை பற்றிய தொலைக்காட்சித் தொடருக்கு உலகளவில் அறியப்பட்ட ஆளுமை பியர் கிரில்ஸ். ‘மேன் வெர்சஸ் வைல்ட்’, ‘ரன்னிங் வைல்ட் வித் பியர் கிரில்ஸ்’ ‘பியர் கிரில்ஸுடன் தீவு’ போன்ற நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார் கிரில்ஸ். அவரது நிகழ்ச்சிகளைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பார்கள்.
Also Read | Australia: 2020 ஆம் ஆண்டிற்கான கிரிக்கெட் விருதுகள் அறிவிப்பு
’சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்துடன் Bear Grylls: மெகாஸ்டார் ரஜினிகாந்த் பியர் கிரில்ஸின் 'இன்டூ தி வைல்ட்' ('Into the Wild') நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். இந்த அத்தியாயம் கர்நாடகாவின் பந்திபூர் புலி சரணாலயம் மற்றும் தேசிய பூங்காவில் படமாக்கப்பட்டது. Pic Courtesy: Twitter/@BearGrylls
பிரதமர் நரேந்திர மோடியுடனான தனது நிகழ்ச்சியைப் பற்றி பேசிய கிரில்ஸ், ஒரு அழகிய பின்னணியில் பிரதமர் ஒரு கப் தேநீர் பகிர்ந்துகொண்ட த்ரோபேக் படம் ஒன்றை வெளியிட்டார். மோடியுடன் பிரபலமான ஜங்கிள் சர்வைவல் புரோகிராம் ‘மேன் வெர்சஸ் வைல்ட்’ எபிசோடை படமாக்கிய கிரில்ஸ், இது தனது 'பிடித்த' புகைப்படங்களில் ஒன்று என்று எழுதினார். Pic Courtesy: Twitter/@BearGrylls
'இன்டூ தி வைல்ட்' நிகழ்ச்சியில் அக்ஷய் குமாருடன் Bear Grylls பியர் கிரில்ஸ் தனது சாகச நிகழ்ச்சியில் பல பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றினாலும், 2020 செப்டம்பர் மாதத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாருடன் இணைந்த நிகழ்ச்சி மிகவும் பிரத்யேகமானது. ரை தொகுத்து வழங்கினார். ‘Into the Wild With Bear Grylls' ’ இன்ஃபோடெயின்மென்ட் பிரிவின் வரலாற்றில் இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட இரண்டாவது நிகழ்ச்சியாக சாதனையை பதிவு செய்துள்ளது. Pic Courtesy: Instagram/beargrylls
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் பியர் கிரில்ஸ் 'Running Wild': 2016 டிசம்பர் மாதத்தில் பியர் கிரில்ஸின் என்.பி.சி ரியாலிட்டி ஷோ 'ரன்னிங் வைல்ட்' இல் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பங்கேற்றார். இருவரும் அலாஸ்காவில் காட்டுப்பகுதி வழியாக மலைப் பகுதிகளில் பயணம் செய்தனர். இந்த ஜோடியின் மலையேறும் பயணம் உலகளவில் பார்வையாளர்களை கவர்ந்தது. Pic Courtesy: Instagram/beargrylls
'ரன்னிங் வைல்ட்' படத்தில் பியர் கிரில்ஸ் ஹாலிவுட் நடிகை கேட் ஹட்சன் கலந்து கொண்டார். 2015 ஆம் ஆண்டில் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்ச்சி, நடிகை Kate Hudson-இன் தைரியமான பக்கங்களை எடுத்துக் காட்டியது. Pic Courtesy: Instagram/beargrylls
'ரன்னிங் வைல்ட் வித் பியர் கிரில்ஸ்' ('Running Wild with Bear Grylls') நிகழ்ச்சியில் அயர்லாந்தில் கிரில்ஸில் உடன் இணைந்தார் கோர்ட்டேனி காக்ஸ். இருவரும் மலையுச்சிகளில் ஏறி சாகசம் செய்தனர். மலைச் சிகரங்களில் உறைய வைக்கும் குளிரை அனுபவித்த அவர்களை ரசிகர்களால் என்றென்றும் மறக்க முடியாது. Pic Courtesy: Instagram/beargrylls