தொண்டை வலியால் அவதியா? நிவாரணம் பெற இவற்றை செய்யலாம்

குளிர் காலநிலை மற்றும் குளிர்ந்த உணவுகள் அடிக்கடி தொண்டை வலிக்கு வழிவகுக்கும். ஆனால் சில பொடிகளை வீட்டிலேயே தயார் செய்து உட்கொண்டால் தொண்டை வலி சுலபமாக சரியாகிவிடும்.

 

1 /5

உப்பு நீர்: சிறிது வெதுவெதுப்பான நீரில் சிறிதளவு உப்பைக் கலந்து வாய் கொப்பளிப்பது தொண்டை வலியின் அசௌகரியத்தைக் குறைக்க உதவும். ஒரு நாளைக்கு மூன்று முறை உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது தொண்டை வலியிலிருந்து விடுபடலாம்.

2 /5

இஞ்சி: இஞ்சியில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. தொண்டை வலி மற்றும் அசௌகரியத்திற்கு இது ஒரு சிறந்த தீர்வாகும். தொண்டை வலி இருக்கும் போது இஞ்சி டீ குடிப்பது நல்லது.

3 /5

கிராம்பு: கிராம்பு தொண்டை வலி நிவாரணியாகும். கிராம்புகளை மென்று அதன் சாறு சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குறையும்.

4 /5

துளசி: துளசி இலையைக் கொதிக்க வைத்த தண்ணீரைக் குடித்தால் தொண்டை வலி குறையும். துளசி இலைகளைக் கொதிக்க வைத்த தண்ணீரைக் கொப்பளிப்பதும் நல்லது.

5 /5

மஞ்சள்: சிறிது மஞ்சளை வெதுவெதுப்பான நீரில் கலந்து குடித்து வந்தால் தொண்டை வலி நீங்கும். அதேபோல் வெதுவெதுப்பான நீரில் மஞ்சள் மற்றும் உப்பு கலந்து வாய் கொப்பளிப்பது தொண்டை புண் நீங்கும்.