Social Media vs Cricketers: விராட் கோலி தொடங்கி யுவராஜ் சிங் வரை சமூக ஊடகங்களை ஆளும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலர் உள்ளனர்... அவர்களில் டாப் 5 வீரர்கள்...
இந்திய கிரிக்கெட்டர் விராட் கோலி, பிரபல சமூக ஊடகமான ட்விட்டரில் 50 மில்லியன் பின்தொடர்பவர்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் ஆனார். சமூக ஊடகங்களில் அதிக பின் தொடர்பவர்களை வைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்களின் பட்டியல்....
மேலும் படிக்க | கங்குலி, ஜெய் ஷாவுக்கு பதவி நீட்டிப்பு நிச்சயம்! உச்ச நீதிமன்ற தீர்ப்பின் எதிரொலி
முன்னாள் இந்திய கேப்டன் விராட் கோலி உலகளவில் அதிகம் பின்தொடரும் கிரிக்கெட் வீரர் ஆக இருக்கிறார் மற்றும் இன்ஸ்டாகிராமில் 211 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவர் கோலி. கோஹ்லி 49 மில்லியனுக்கும் அதிகமான பேஸ்புக் ரசிகர்களைக் கொண்டுள்ளார் மற்றும் சமீபத்தில் ட்விட்டரில் 50 மில்லியன் பின்தொடர்பவர்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் ஆனார். மொத்தத்தில் அவருக்கு சமூக வலைதளங்களில் 310 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.
2013 இல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சச்சின் டெண்டுல்கர் தொடர்ந்து ரசிகர்களின் விருப்பமானவராக இருக்கிறார். சமூக ஊடகங்களை ஆளும் இந்திய கிரிக்கெட் வீரர்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். 34,000 ரன்களுக்கும் 100 சதங்களுக்கும் மேல் தனது சர்வதேச வாழ்க்கையை முடித்த மாஸ்டர் பிளாஸ்டரை, இன்ஸ்டாகிராமில் சுமார் 31.5 மில்லியன் பேரும், ட்விட்டரில் 35.9 மில்லியன் மக்களும், பேஸ்புக்கில் 37 மில்லியன் நெட்டிசன்களும் பின் தொடர்கின்றனர்.
ஹிட்மேன் என்று அழைக்கப்படும் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். ட்விட்டரில் 20.9 மில்லியன், பேஸ்புக்கில் 20 மில்லியன், இன்ஸ்டாகிராமில் 20.4 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்டுள்ளார் ரோஹித். (புகைப்படம்: AFP)
இன்ஸ்டாகிராமில் 23.1 மில்லியன் பின்தொடர்பவர்களும், ட்விட்டரில் 8 மில்லியன் பின்தொடர்பவர்களும், பேஸ்புக்கில் 12 மில்லியன் பின்தொடர்பவர்களும் கொண்ட ஹர்திக் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். (புகைப்படம்: AFP)
யுவராஜ் சிங்: 2007 டி20 உலகக் கோப்பை மற்றும் 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வெற்றிகளின் மூலம் பிரபலமானவர். ட்விட்டரில் 5.8 மில்லியன், பேஸ்புக்கில் 19 மில்லியன் மற்றும் இன்ஸ்டாகிராமில் 15 மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர். (புகைப்படம்: AFP)
சமூக வலைதளங்களில் 310 மில்லியன் பின்தொடர்பவர்களை கொண்ட வீரர் யார்?