வாட்ஸ்அப் மூலம் SBI வங்கியின் பேலன்ஸ் செக் செய்ய எளிய வழிகள்!

பாரத ஸ்டேட் வங்கியானது அதன் வாடிக்கையாளர்களின் வசதிக்காக வீட்டில் இருந்தபடியே வாட்ஸ் அப் மூலம் பேலன்ஸ் செக் செய்வது மற்றும் மினி ஸ்டேட்மென்ட் பெறும் வசதியை வழங்குகிறது.

 

1 /4

வாட்ஸ் அப் பேங்கிங்கை ஆக்டிவேட் செய்ய முதலில் "WAREG (உங்களது வங்கி கணக்கு எண்)" என டைப் செய்து  917208933148 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் செய்ய வேண்டும்.  

2 /4

நீங்கள் அனுப்பிய எஸ்எம்எஸ்-க்கு பதில் வந்ததும், உங்கள் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட வாட்ஸ் அப் எண்ணிலிருந்து 'HI' என்று நீங்கள் மெசேஜ் அனுப்ப வேண்டும்.  

3 /4

அதன் பிறகு உங்களது வாட்ஸ் அப் திரையில் ஒரு மெசேஜ் வரும் அதில் 1) Account Balance, 2) Mini Statement மற்றும் 3) De-register from Whatsapp Banking என்கிற 3 ஆப்ஷன்கள் இருக்கும்.  

4 /4

இப்போது உங்கள் வங்கி கணக்கின் இருப்பை தெரிந்துகொள்ள விரும்பினால் 1 என்று டைப் செய்து மெசேஜ் செய்ய வேண்டும், மினி ஸ்டேட்மென்ட் பெற விரும்பினால் 2 என்று டைப் செய்து மெசேஜ் செய்ய வேண்டும் மற்றும் வாட்ஸ் அப் பேங்கிங்கை நீங்கள் டீ-ஆக்டிவேட் செய்ய விரும்பினால் 3 என்று டைப் செய்து மெசேஜ் செய்ய வேண்டும்