Zee News தேர்தல் கருத்துக்கணிப்பு: மோடி vs ராகுல்... அரியணை ஏறப்போவது யார்?

Zee News - Matrize Opinion Polls: மக்களவை தேர்தலை முன்னிட்டு Zee News மற்றும் Matrize வெளியிட்ட தேர்தல் கருத்துக்கணிப்புகளின் முக்கிய தகவல்களை இங்கு காணலாம்.

  • Mar 16, 2024, 00:43 AM IST

மக்களவை தேர்தல் தேதி மார்ச் 16ஆம் தேதி மதியம் அறிவிக்கப்பட உள்ள நிலையில், Zee News மற்றும் Matrize தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பை மார்ச் 15ஆம் தேதி இரவு வெளியிட்டுள்ளது.

1 /7

மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 390 தொகுதிகளை கைப்பற்றி மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 96 தொகுதிகளையும், மற்ற கட்சிகள் மொத்தமாக 57 தொகுதிகளையும் கைப்பற்றும் என Zee News - Matrize தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளது.   

2 /7

இந்த கருத்துக்கணிப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் இந்தளவிற்கு பிரபலமடைய என்ன காரணம் என மக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு 41 சதவீதத்தினர் அவரின் நலத்திட்டங்களை காரணமாக கூறியுள்ளனர். குறிப்பாக, 18 சதவீதத்தினர் ராமர் கோவில் கட்டியதை காரணமாக கூறியுள்ளனர். மேலும், பிரதமர் மோடியின் கறைபடியாத மதிப்பே அவர் பிரபலமடைந்ததற்கான காரணம் என 22 சதவீதத்தினர் தெரிவித்திருந்தனர். 12 சதவீதத்தினர் அவரின் தேசியவாதத்தை காரணமாக கூறியிருந்தனர்.  

3 /7

இன்றைய தேதியில் தேர்தல் நடந்தால் என்ன விவகாரங்கள் பெரிய பிரச்னையாக இருக்கும் என மக்களிடம் கேள்வியெழுப்பப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் வேட்பாளர் பிரச்னையாக இருக்கும் என 56 சதவீதத்தினரும், மத்திய அரசின் திட்டங்கள் என 17 சதவீதத்தினரும் கருத்து தெரிவித்துள்ளனர். மறுபுறம் பாஜகவுக்கு விலைவாசி பிரச்னையாக இருக்கும் என 4 சதவீதத்தினரும், வேலைவாய்ப்பு பிரச்னையாக இருக்கும் என 8 சதவீதத்தினரும் என தெரிவித்துள்ளனர்.   

4 /7

மேலும் ராமர் கோவில் கட்டியதால் பாஜகவுக்கு பலன் இருக்கிறதா என்ற கேள்விக்கு, சிறப்பான பலன் இருக்கும் என 56 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளனர். கொஞ்சம் பலன் இருக்கத்தான் செய்யும் என 26 சதவீதத்தினரும் தெரிவித்துள்ளனர். 9 சதவீதத்தினர் பலன் இருக்காது எனவும், 5 சதவீதத்தினர் பாஜகவுக்கு இதனால் தோல்வியே வரும் எனவும் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து தங்களுக்கு தெரியாது என 4 சதவீதத்தினரும் தெரிவித்திருந்தனர்.   

5 /7

பிரதமர் மோடிக்கு எதிரான வலிமையான எதிர்க்கட்சி தலைவராக இப்போது யார் இருக்கிறார்கள் என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு 23 சதவீதத்தினர் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியையும், 8 சதவீதத்தினர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலையும், 14 சதவீதத்தினர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும், 11 சதவீதத்தினர் பிரியங்கா காந்தியையும் தெரிவித்திருந்தனர். 44 சதவீதத்தினர் வேறு தலைவர்களை குறிப்பிட்டுள்ளனர்.   

6 /7

காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடோ நீதி யாத்திரை இந்தியா கூட்டணிக்கு கைக்கொடுக்குமா என்ற கேள்விக்கு அதிகமாக பலனளிக்கும் என 9 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர். 22 சதவீதத்தினர் ஓரளவு பலனளிக்கும் என்றும் 52 சதவீதத்தினர் எவ்விதத்திலும் பலனளிக்காது என்றும் தெரிவித்துள்ளனர். 17 சதவீதத்தினர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை.  

7 /7

இந்தியா கூட்டணி இந்த மக்களவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா எனவும் மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதில் 12 சதவீதத்தினர் பெரிய தாக்கம் இருக்கும் என்றும் 21 சதவீதத்தினர் ஓரளவு தாக்கம் இருக்கும் எனவும் தெரிவித்திருந்தனர். 9 சதவீதத்தினர் இதுகுறித்து கருத்து தெரிவிக்கவில்லை. மீதம் உள்ள 58 சதவீதத்தினர் தேசிய ஜனநாயக கூட்டணியை விட இந்தியா கூட்டணி பலவீனமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். Zee News - Matrize கருத்துக்கணிப்பு ஏறக்குறைய தேர்தல் முடிவுகளை ஒத்து இருக்கும், இருப்பினும், இது தேர்தல் முடிவல்ல என்பதையும் வாசகர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.