பெண்களுக்கு அதிக வட்டி விகிதங்களை தரும் வங்கி! எவ்வளவு தெரியுமா?

Highest Interest on FD For Woman : நிலையான வைப்புத்தொகை என்பது நீண்ட சேமிப்பு திட்டங்களில் ஒன்றாகும். பெண்களின் சேமிப்புகள் குடும்பத்தை மட்டுமின்றி நாட்டின் பொருளாதாரத்தையே வலுவாக்கும் என பல்வேறு பொருளாதார வல்லுநர்கள் வலியுறுத்தும் நிலையில், அவர்களின் சேமிப்பை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களும் செயல்பாட்டில் உள்ளன. அந்த வகையில், நிலையான வைப்புத்தொகைக்கு (Fixed Deposit) அதிக வட்டி தரும் ஒரு நிதி நிறுவனத்தின் திட்டங்கள் குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம். 

 

  • Jan 07, 2023, 06:29 AM IST

 

 

1 /4

ஸ்ரீராம் குழுமத்தின் ஒரு அங்கமான இந்தியாவின் மிகப்பெரிய ரீடெய்ல் NBFC, ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் (SFL) கடந்த ஜனவரி 1 அன்று, நிலையான வைப்புத்தொகை (ஸ்ரீராம் உன்னதி வைப்புத்தொகை) விகிதங்களை உயர்த்துவதாக அறிவித்திருந்தது. வாடிக்கையாளர்கள் நிலையான வைப்புதொகைகளில் 9.36 சதவீதம் வரை வட்டி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2023ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி,  முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

2 /4

பொதுவான வாடிக்கையாளர்களின் 12 மாதங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத்தொகையில்  NBFC, 7.3 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிதி நிறுவனம் 18 மாதங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத்தொகைக்கு 7.5 சதவீதமும், 24 மாதங்களுக்கு 7.75 சதவீதமும், 48 மாதங்களுக்கு 8.25 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்குகிறது. 60 மாதங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத்தொகை திட்டத்தை தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு 8.45 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.  

3 /4

12 மாதங்களில் முதிர்ச்சியடையும் மூத்த குடிமக்களுக்கான நிலையான வைப்புத்தொகைக்கு NBFC, 7.83 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிதி நிறுவனம் 18 மாதங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத்தொகைக்கு 8.04 சதவீதமும், 24 மாதங்களுக்கு 8.28 சதவீதமும், 48 மாதங்ளுக்கு 8.79 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்குகிறது. 60 மாதங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத்தொகைகளை தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு 8.99 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.  

4 /4

12 மாதங்களில் முதிர்ச்சியடையும் பெண்களுக்கான நிலையான வைப்புத்தொகைக்கு NBFC, 7.41 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. இந்த நிதி நிறுவனம் 18 மாதங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத்தொகைக்கு 8.41 சதவீதமும், 24 மாதங்களுக்கு 8.66 சதவீதமும், 48 மாதங்களுக்கு 9.17 சதவீதமும் வட்டி விகிதத்தை வழங்குகிறது. 60 மாதங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புத்தொகையை தேர்ந்தெடுக்கும் பெண்களுக்கு 9.36 சதவீத வட்டி விகிதம் கிடைக்கும்.